Home One Line P1 ஹாடி அவாங்கின் முயற்சிகளை சனுசி நாசப்படுத்துகிறார்!

ஹாடி அவாங்கின் முயற்சிகளை சனுசி நாசப்படுத்துகிறார்!

609
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அனைத்து கட்சிகளுடனான உறவை மேம்படுத்தும் பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கின் முயற்சிகளை கெடா மந்திரி பெசார் முகமட் சனுசி முகமட் நோர் நாசப்படுத்துவதாக மஇகா பொதுச் செயலாளர் எஸ். வேள்பாரி தெரிவித்தார்.

2019- ஆம் ஆண்டில் அப்துல் ஹாடி மஇகா தலைமையகத்திற்கு தனிப்பட்ட முறையில் வருகை புரிந்ததாகவும், இந்தியக் கட்சியுடன் நெருக்கமான ஒத்துழைப்புக்கான விருப்பத்தை வெளிப்படுத்தியதாகவும் வேள்பாரி கூறினார்.

#TamilSchoolmychoice

“மஇகா தலைவரின் உன்னத அணுகுமுறை மஇகா மற்றும் பாஸ் இடையேயான ஒத்துழைப்புக்கான வாய்ப்பை உருவாக்கியது. பாஸ் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்கும் என்று மஇகா நம்பியது. துரதிர்ஷ்டவசமாக, பாஸ் தலைவர் எதிர்பார்த்திருந்த மஇகா-பாஸ் ஒத்துழைப்பு இப்போது கெடா மந்திரி பெசாரால் நாசப்படுத்தப்பட்டு அழிக்கப்பட்டு வருகிறது,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

மாநிலத்தில் சிறுபான்மையினர், குறிப்பாக இந்திய சமூகம் தொடர்பான சனுசியின் கொள்கையின் காரணமாக மஇகா தளர்வான உறவுகளை எதிர்கொண்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மாதம், ஒரு இந்து கோவிலை இடிக்க அங்கீகாரம் அளித்தபோது மத்திய அரசிடம் ஆலோசனை வழங்குவதாக சனுசி அளித்த வாக்குறுதியை மீறியதாக எம்.ஐ.சி புகார் கூறியது.

கடந்த வாரம், சனுசி தைப்பூசத்தை முன்னிட்டு கெடாவில் வழங்கப்பட்டு வந்த விடுமுறையை இரத்து செய்வதாக கூறியிருந்தார். அதனை அடுத்து அவருக்கு இந்திய தலைவர்கள், பொது மக்களிடமிருந்து எதிர்ப்பு எழுந்து வருகிறது.