கோலாலம்பூர்: எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் அவசரநிலை பிரகடனத்தின் போது நாடாளுமன்றத்தை இடைநிறுத்துவதற்கான அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அவசரநிலையின் போது நாடாளுமன்றத்தை இடைநிறுத்துமாறு மாமன்னருக்கு பிரதமர் அளித்த அறிவுரை சட்டத்திற்கு எதிரானது மற்றும் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று அன்வார் கூறியுள்ளார்.
“விண்ணப்பத்தில் சவால் செய்யப்படுவது அவசரகால அறிவிப்பு அல்ல என்பதை இங்கு வலியுறுத்த வேண்டும். ஆனால், அவசரநிலை கட்டளைச் சட்டம் 14- வது விதிக்கு ஒப்புதல் அளிக்க, மாமன்னரிடம் பிரதமர் நாடாளுமன்றத்தை இடைநிறுத்தக் கோரியது தேவையற்றது. பிரதமரின் ஆலோசனை சட்டத்திற்கு எதிரானது என்று கூறப்படுகிறது,” என்று அன்வாரின் வழக்கறிஞர் ராம்கர்பால் சிங் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.