கோலாலம்பூர்: கட்சி உறுப்பினர்கள் அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடியை முறையற்ற முறையில் தாக்கும் முறையை கைவிடுமாமாறு அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹசான் வலியுறுத்தினார். இது அம்னோவுக்குள் ஓர் ஆரோக்கியமற்ற கலாச்சாரம் என்று அவர் கூறினார்.
அகமட் சாஹிட் ஹமிடி பதவி விலகக் கூறும் அடிமட்டத்தினரால் எழுப்பப்பட்டதாகக் கூறப்படும் பதாகைகள் பற்றிய சம்பவத்தைக் குறிப்பிடுகையில், முகமட் இதனைக் கூறினார். தலைவருக்கு மரியாதை இல்லாத வகையில் கருத்து வேறுபாடுகள் முறையற்ற முறையில் குரல் கொடுக்கக்கூடாது என்று அவர் கூறினார்.
“அவமானப்படுத்தும் மற்றும் முரட்டுத்தனத்துடன் கூடிய பதாகைகள் பயன்படுத்தப்பட்டன. இது அம்னோவின் கலாச்சாரம் அல்ல. உண்மையில் இது முஸ்லிம்கள் மற்றும் மலாய்க்காரர்களாகிய நம்முடைய பழக்கவழக்கங்களும் ஒழுக்கங்களும் அல்ல. தலைவர் மீதான எங்கள் மரியாதையை ஒருபோதும் இழக்க மாட்டோம். இது மரியாதை மற்றும் நல்ல பழக்கவழக்கங்களுடன் நடத்தப்பட வேண்டும். அம்னோ ஜனநாயக விழுமியங்களைக் கொண்டிருப்பதால், நாம் வெவ்வேறு கருத்துகள், விருப்பங்கள் மற்றும் பிம்பங்களைக் கொண்டிருக்கலாம், ஆனால் அது அம்னோவைப் பிளவுபடுத்தும் மோதல்களுக்கு வழிவகுக்க வேண்டாம், ” என்று அவர் கூறினார்.
அகமட் சாஹிட் ஹமிடி பதவி விலகக் கூறி, பொது இடங்களில் பதாகைகளின் பல படங்கள் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.