Home கலை உலகம் 3 வகை பாடல்களிலும் முத்திரை பதித்த வாலி

3 வகை பாடல்களிலும் முத்திரை பதித்த வாலி

820
0
SHARE
Ad

சென்னை, ஜுலை 19– தமிழ்த்திரை உலகில் எந்த வகை பாடலையும் எழுத முடியும் என்பதை பல தடவை நிரூபித்தவர் வாலி. அவர் தன்னம்பிக்கை தரும் பாடல்கள், காதல் பாடல்கள் மட்டுமே எழுதவில்லை. ஆன்மீக பாடல்கள் எழுதுவதிலும் அவர் தனித்துவம் பெற்றிருந்தார்.

Vaali_1521222hஇவை தவிர குத்து பாடல்கள் எழுவதிலும் அவர் சளைத்தவர் அல்ல என்பதை காட்டினார். அவர் எழுதிய தன்னம்பிக்கை தரும் பாடல்கள், காதல் பாடல்களுக்கு எத்தனையோ நூறு பாடல்களை உதாரணமாக சொல்லலாம்.

அவர் எழுதிய முதல் ஆன்மீகப் பாடலான ‘கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்ததேன உனை மறவேன்’ என்ற பாடல் இன்றும் கோவில்களில் கேட்கலாம். அதுபோல ‘தசாவதாரம்’ படத்தில் வந்த ‘கல்லை மட்டும் கண்டால்’ பாடல் இன்னமும் மக்கள் மனதில் ஒலித்து கொண்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

குத்து பாடல்களை பொருத்தவரை அவர் இளம் கவிஞர்களுக்கு சவால் விடும் வகையில் பாடல்கள் எழுதினார். ‘நேத்து ராத்திரி யம்மா’, ‘ராக்கம்மா கையத் தட்டு’ பாடல்களை ரசித்து இன்னும் கேட்கிறார்கள்.

ரகுமான் இசையில் கடைசி பாடலை ‘காவியத்தலைவன்’ படத்துக்காக எழுதி கொடுத்தார். அது இன்னும் வெளியாகவில்லை.

நாட்டில் இன்று என்ன நடக்கிறதோ அதை தன் பாடல் வரிகளில் பதிவு செய்வதில் கவிஞர் வாலிக்கு நிகராக வேறு யாரையுமே சொல்ல முடியாது. அன்று முதல் இன்று வரையிலான அவரது பாடல் வரிகளை நன்கு உன்னிப்பாக கவனித்துப் பார்த்தால் அது புரியும்.

சமீபத்தில் வெளியான எதிர்நீச்சல் படத்தில் அவர் எழுதிய பாடலில், ‘மின்வெட்டு நாளில், இங்கு நீ மின்சாரம் போல வந்தாயே’ என்று எழுதி இருந்தார்.

மறைந்த முதல்– அமைச்சர் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கிய நேரம். அவர் ஒரு தடவை நெல்லைக்கு கட்சி பிரசார கூட்டத்தில் பங்கேற்க சென்றிருந்தார். அவர் தன்னுடன் கவிஞர் வாலியை அழைத்து சென்றிருந்தார்.

கூட்டம் முடிந்த மறுநாள் காலை தன் அறையில் இருந்து வெளியில் வந்த எம்.ஜி.ஆர். சுற்றும் முற்றும் பார்த்தப்படி, வாலி எங்கே? வாலி எங்கே? என்றார். இதைக் கேட்ட தொண்டர் ஒருவர் எம்.ஜி.ஆர். வாளியைத்தான் கேட்கிறார் என்று தவறாகப் புரிந்து கொண்டு ஒரு பெரிய வாளியை தூக்கிக் கொண்டு ஓடி வந்தார்.

அதைப் பார்த்ததும் எம்.ஜி. ஆரும், மற்றவர்களும் விழுந்து, விழுந்து சிரித்தனர்.

கம்ப ராமாயணத்தில் வரும் வாலி பாத்திரம் மிகவும் புகழ் பெற்றது. வாலியை நேருக்கு நேர் யார் எதிர்த்து நின்றாலும், அவர்களது பலத்தில் பாதி வாலிக்கு போயவிடும். எனவேதான் ராமன் கூட வாலியை மறைந்து நின்று கொன்றான்.

அத்தகைய வாலி கதாபாத்திரம் போலவே கவிஞர் வாலியும் நிஜ வாழ்க்கையில் திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 60 ஆண்டுகள் காலமாக தமிழ்த் திரையுலகில் பாடல் எழுதுவதில் கோலோச்சிய வாலியை எதிர்த்து, அவரது திறமையை குறைய செய்யும் ஆற்றல் யாருக்கும் வரவில்லை.

அவரை எந்த கவிஞராவது எதிர்த்தால், வாலியின் பலம்தான் கூடுமே தவிர, வாலி பலம் குறையாது என்று பல தடவை பல மேடைகளில் பலரும் கூறியுள்ளனர். அது வாலியின் கடைசி உயிர் மூச்சுவரை நிஜமாக இருந்தது.