ஆக. 1- நடிகை கனகா உடல் நிலை பற்றி நேற்று பரபரப்பான வதந்திகள் வெளியாயின.
கேரள மருத்துவமனையில் அவர் இறந்து விட்டதாக தொலைகாட்சிகளில் செய்தி வந்தன.
அதிசயப் பிறவி, கோவில் காளை, கும்பக்கரை தங்கையா, சாமுண்டி போன்ற படங்களிலும் நடித்தார். இவர் மறைந்த நடிகை தேவிகாவின் மகள் ஆவார்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள வீட்டில் கனகா தனியாக வசித்து வந்தார்.
சில தினங்களுக்கு முன் அவருக்கு புற்று நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவதாகவும் செய்தி பரவியது.
இதையடுத்து நேற்று மாலை ராஜாஅண்ணாமலைபுரம் வீட்டில் இருந்து கனகா திடீர் என வெளியே வந்தார். நான் உயிரோடுதான் இருக்கிறேன் என பேட்டி அளித்தார். அப்போது நான் பணக்காரி. என் சொத்துக்களை அபகரிக்க சதி நடக்கிறது என்று குற்றம் சாட்டினார்.
இதையடுத்து கனகாவுக்கு சொத்து பிரச்சினையில் உதவ நடிகர் சங்கம் முன் வந்துள்ளது. சொத்து விவகாரத்தில் கனகாவுக்கு நடிகர் சங்கம் உறுதுணையாக இருக்கும் என்று சரத்குமார் கூறியுள்ளார்.
இதனை கனகாவிடம் நடிகர் சங்க மானேஜர் நடேசன் தெரிவித்தார். கனகாவுக்கு என்ன உதவி தேவையோ அதை நடிகர் சங்கம் செய்து கொடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.