Home உலகம் 4 ஆண்டுகளாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தாய்லாந்து மன்னர் அரண்மனை திரும்புகிறார்

4 ஆண்டுகளாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தாய்லாந்து மன்னர் அரண்மனை திரும்புகிறார்

606
0
SHARE
Ad

பாங்காக், ஆக.1-தாய்லாந்து நாட்டின் மன்னர் புமிபோல் அதுல்யடெஜ் (வயது 85) நுரையீரல் நோய் பாதிப்பால் 2009ம் ஆண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Thailand's King Bhumibol Adulyadej leaves the Siriraj Hospital for a ceremony at the Grand Palace in Bangkok4 ஆண்டுகளாக மருத்துவமனையில்  தங்கி சிகிச்சை பெற்று வந்த அவர் விரைவில் அரண்மனைக்கு திரும்புகிறார் என அரசு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

பாங்காக் நகரில் இருந்து 192 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஹூவா ஹின் நகரின் க்லாய் கங்வான் அரண்மனைக்கு வரும் மன்னரை வரவேற்க பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக மாகாண கவர்னர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

மிக நெடிய பாரம்பரியம் கொண்ட மன்னராக கருதப்படும் புமிபோல் அதுல்யடெஜ் அனைத்து தரப்பு மக்களின் அன்புக்கும், மதிப்புக்கும் உரியவராக கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.