செமின்யெய், பிப்.7- மலேசிய தமிழ் நெறிக் கழக செமினி கிளையில் பாவாணரின் 111ஆம் ஆண்டு பிறந்த நாள் முன்னிட்டு ஞாயிறு மொழி ஞா.தேவநேயப் பாவாணரின் சிறப்பும் வரலாறும் எனும் தலைப்பில் மலேசிய தமிழ்நெறிக்கழக் தேசியத் தலைவர் இரா.திருமாவளன் சிறப்புரை ஆற்றவுள்ளார்.
தமிழரின் தொன்மையை மாண்புறச் செய்தவர் செந்தமிழ்ச் செல்வர் மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர் தமிழ் மொழி ஆய்விலேயே ஐம்பது ஆண்டுகள் மூழ்கித் திளைத்த ஓர் ஊழி அறிஞர் ஆவார்.
அவரின் கருத்துகள் முறிக்கப்பட்டத் தமிழனின் முதுகெலும்பைத் தூக்கி நிறுத்தும் வல்லமை வாய்ந்தன.
அதோடு இல்லாமல் தூங்கிக் கிடக்கும் தமிழனைத் தட்டி எழுப்பும் வீறு நிரம்பியவை.
மொழியாரய்ச்சி என்னவென்றே அறியாமல் கிடந்தத் தமிழனுக்கு மொழியுணர்வூட்டி, அதன் வழிப் பண்டைய தமிழர்களின் வரலாற்றை உணர்த்தி எழுச்சிப் பெற செய்த இலக்கணச் செம்மல் பாவாணர் அவர்களைச் சாரும்.
எனவே, அன்புத் தமிழ் நெஞ்சங்கள் அனைவரும் இந்நிகழ்விற்கு வற்றாத ஆதரவு நல்குமாறு விழைக்கின்றனர்.
இந்நிகழ்ச்சி 7.2.1013 வியாழக்கிழமை இரவு 8.00 மணிக்கு மலேசியத் தமிழ் நெறிக் கழகச் செமினி கிளை எண். 5பி, 2 வது மாடி, ஜாலான் செமின்யெய், சென்ரல் 8, செமியெய் என்ற முகவரியில் நடைபெறும்.
மேல் விவரங்களுக்கு, நிலவன் (தலைவர்) 013-318 5423/016-316 5423, மற்றும் தமிழ் தாசன் ( துணைத் தலைவர்) 012-263 9707.