Home உலகம் ஈரான் ஜனாதிபதியாக ரவ்கானி பதவியேற்றார்: சிரியாவுடனான உறவு தொடரும் என அறிவிப்பு

ஈரான் ஜனாதிபதியாக ரவ்கானி பதவியேற்றார்: சிரியாவுடனான உறவு தொடரும் என அறிவிப்பு

648
0
SHARE
Ad

டெஹ்ரான், ஆக. 5- ஈரானில் கடந்த ஜுலை மாதம் புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது.

Rowhani-new-Iran-president_6-16-2013_105479_lஇதில் 73 சதவிகித மக்கள் வாக்களித்தனர். ஆறு பேர் கலந்து கொண்ட ஜனாதிபதி தேர்தலில் 3 1/2 கோடி மக்கள் வாக்களித்தனர். இதில் ஒரு கோடியே 80 லட்சம் வாக்குகளைப் பெற்று ஹசன் ரவ்கானி (படம்) வெற்றி பெற்றார்.

இதனையடுத்து, ஈரான் பாராளுமன்றத்தில் நேற்று  மாலை நடைபெற்ற கோலாகல விழாவில் அந்நாட்டின் புதிய ஜனாதிபதியாக ரவ்கானி பதவி ஏற்றுக் கொண்டார்.

#TamilSchoolmychoice

முன்னதாக, நிருபர்களுக்கு பேட்டியளித்த ரவ்கானி, ‘ஈரானுக்கும் சிரியாவுக்குமான உறவு புரிந்துணர்வின் அடிப்படையில் ஆனது.

இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று சிறப்பு மிக்க இந்த வலிமையான உறவை உலகின் எந்த சக்தியாலும் அசைக்க முடியாது. உலக நாடுகள் ஈரானை தனிமைப்படுத்தி வைத்திருக்கும் நிலைமையை மாற்ற பாடுபடுவேன்.’ இவ்வாறு அவர் கூறினார்.

ரவ்கானியின் பதவியேற்பு விழாவில் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்திய துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரியும் இவ்விழாவில் பங்கேற்று புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்ட ரவ்கானிக்கு வாழ்த்து தெரிவித்தார்.