Home இந்தியா நரேந்திர மோடி ஐதராபாத் வருகையை எதிர்த்து வழக்கு: மதக்கலவரம் ஏற்படும் என குற்றச்சாட்டு

நரேந்திர மோடி ஐதராபாத் வருகையை எதிர்த்து வழக்கு: மதக்கலவரம் ஏற்படும் என குற்றச்சாட்டு

582
0
SHARE
Ad

நகரி, ஆக. 8– குஜராத் முதல்– மந்திரி நரேந்திரமோடி வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்ய திட்டமிட்டு உள்ளார்.

முதல் கூட்டமாக வருகிற 11–ந்தேதி ஐதராபாத் வருகிறார். பாரதீய ஜனதா கட்சி ஏற்பாடு செய்துள்ள பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

Narendra-Modi-Pardaphash-79064அவரது பேச்சை திரையரங்குகளில் நேரடியாக ஒளிபரப்பு செய்ய பாரதீய ஜனதா திட்டமிட்டு உள்ளது.

#TamilSchoolmychoice

இதற்காக பல திரையரங்குகளை வாடகைக்கு எடுத்து பொது மக்கள் இலவசமாக பார்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் நரேந்திர மோடி ஐதராபாத் வருவதற்கு அனுமதிக்க கூடாது என்று ஆந்திர ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுகுறித்து வக்கீல் குலாம் ரப்பானி என்பவர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–

நரேந்திரமோடி ஐதராபாத் வந்தால் அங்கு மதக்கலவரம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அவரது வருகைக்கு தடை விதிக்க வேண்டும். இது தொடர்பாக ஏற்கனவே போலீசில் புகார் செய்தேன். ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே மோடி ஐதராபாத் வருவதற்கு வழங்கபட்ட அனுமதியை ரத்து செய்ய உள்துறை செயலாளர், போலீஸ் டி.ஜி.பி., போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.