Home வாழ் நலம் நோய்த்தடுப்பு ஆற்றல் கொண்டது வெற்றிலை

நோய்த்தடுப்பு ஆற்றல் கொண்டது வெற்றிலை

1404
0
SHARE
Ad

ஆக. 14- மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே வெற்றிலையானது பயன் பாட்டில் இருந்து வருகிறது.

பல ஆயிரம் ஆண்டுகளாக பயன்படுத் தப்படும் தாவரங்களில் வெற்றிலையும் ஒன்றாகும். கிமு 2-ம் நூற்றாண்டில் இலங்கையில் எழுதப்பட்டமகாவம்சம் என்னும் நூலில் வெற்றிலை மெல்லுவது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் மிதவெப்ப மற்றும் குளிர்ச்சியான பகுதிகளில் வெற்றிலை வளர்க்கப்படுகிறது. வங்காளம், ஒரிசா, தமிழ் நாடு மும்பை போன்ற இடங்க ளில் இதன் இலைக்காக பயிரிடப்படுகிறது. நம் நாட்டிலும், தோட்டங்கள் சார்ந்த இடங்களில் வெற்றிலை கொடிகள் அதிகமாக பயிரிடப்படுகிறது.

#TamilSchoolmychoice

வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து ஆகியன அதிகம் உள்ளது. இது தவிர வெற்றிலையைப் பயன்படுத்தி பல நோய்களையும் குணப்படுத்தலாம்.

TH04BETEL-BRSC_280813fசெயல்திறன் மிக்க வேதிப் பொ ருள்கள்
கெடினின், சாவிகால், பைரோ கெடிசால், யூஜினால், எக்ஸ்ட் ராகால், ஆக்சாலிக் அமிலம் போன்ற பல வேதிப்பொருள் வெற்றிலையின் மருத்துவ குணங்களுக்கு அடிப்படையாக உள்ளது.

மருத்துவப்பயன் உடைய பகுதிகள்
இலைகளும், வேர்களும் மருத்துவ பயன் உடையவை. இலைகளில் காணப்படும் எளிதில் ஆவியாகும் எண்ணெய் மூச்சுக்குழல் நோய்களுக்கு மருந்தாகிறது.

இலையின் சாறு ஜீரணத்திற்கு உதவுகிறது. வேர்பகுதி பெண்களின் மலட்டுத் தன்மையை போக்குகிறது. அரைடம்ளர் தேங்காய் எண்ணெ யில் 5 வெற்றிலையை போட்டு கொதிக்க விடவும்.

இலை நன்கு சிவந்ததும் வடி கட்டி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டு சொரி, சிரங்கு, படைக்கு தடவி வந்தால் நல்ல குணம் கிடைக்கும்.

தலைவலி
வெற்றிலையைக் கசக்கிக் சாறு எடுத்து அந்த சாற்றில் சிறிதளவு கற்பூரத்தைச் சேர்த்துக் குழப்பி வலியுள்ள இடத்தில் தடவினால் தலை வலி உடனே குண மாகும்.

தேள் விஷம்
இரண்டு வெற்றிலையை எடுத்து அதில் ஒன்பது மிளகை மடி த்து வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்கி தேங்காய் துண்டுகள் சிலவற்றினையும் மென்று தின்றால் தேள் விஷ ம் உடனே முறியும்.

சர்க்கரை வியாதி
சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் வேப்பிலை ஒரு கைப் பிடியளவும் அருகம்புல் ஒரு கைப் பிடியளவும் ஒரு சட்டியில் போட்டு 500 மிலி தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க விடவும்.

தண்ணீரின் அளவு 150 மிலி ஆக குறையும் வரை கொதிக்க விட்டு, பின்பு வடிகட்டி ஆற வைத்து வேளைக்கு 50 மிலி வீதம் மூன்று வேளை உண வுக்கு முன்பு சாப்பிடவும்.

அல்சர்
அல்சர் உள்ளவர்கள் இரண்டு வெற்றி லையுடன் அத்திஇலை 1 கைப்பிடி வேப்பிலை 5 ஆகியவற்றை மேலே உள்ள முறைப்படி கசாயம் தயாரித்து மூன்று வேளை அருந்திவரவும்.

முற்றின வெற்றிலையைச் சாறு பிழிந்து அதில் இரண்டு கரண்டி சாற்றுடன் 3 மிளகு அதே அளவு சுக்கு ஆகிய வற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் கொடுத்தால் இரைப்பு மூச்சுத் திணறல் குணமாகும்.

2628515_mediumதாம்பூலம் தரித்தல்
நமது உடலில் சுரக்கும் 24 விதமான “அமினோ அமிலங்கள்” வெற்றிலையில் உள்ளன.

செரிமானத்துக்கும் பெரிதும் உறுதுணையாகும் இந்த “அமினோ அமிலங்களை” வெற்றிலை மூலம் நாம் அடையும்போது ஜீரண ம் எளிதாகின்றது.

அதனால் தான் நம்முன்னோர்கள் உணவுக்குப் பின் “தாம்பூலம்” தரிக்கும் வழக்கத்தை ஏற்படு த்தியுள்ளனர்.

betel-leaf-used-for-India-weddingவெற்றிலைப் பாக்குடன் கூடிய தாம்பூலம் “மங்கலப் பொ ருள்” என்பது பலர் அறிந்த உண்மை.

ஆனால் நம் முன்னோர் அதி ல் மருத்துவப் பயனையும் புகுத்தியுள்ளனர். மிகச்சிறந்த “நோய்த் தடுப்பு ஆற்றல்” தாம்பூலத்தில் உள்ளது.

வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு இணைந்த தாம்பூலம், மெல்லும் போது உமிழ்நீர் சுரப்பினை தூண்டுவதுடன் ஒருவித உற்சாக உணர்வினை தருகிறது.

பெரும்பாலான நாடுகளில் வெற்றிலைக்குபால் உணர்வை மற்றும் நரம்பு வலுவேற்றும் சக்தி இருப்பதாக கருதப்படுகிறது. அதனால்தான் புது மண தம்பதியர்களுக்கு தாம்பூலம் தரிப்பது என்பது ஒரு சடங்காக நடைபெறுகிறது.