Home வணிகம்/தொழில் நுட்பம் ஆஸ்ட்ரோ வானொலி அனைத்துலக ஒலிபரப்பாக மாறும்!

ஆஸ்ட்ரோ வானொலி அனைத்துலக ஒலிபரப்பாக மாறும்!

444
0
SHARE
Ad

Astro-logo-sliderமிரி, ஆகஸ்ட் 19 – ஆஸ்ட்ரோ வானொலி தனது ஒலிபரப்பை கலிமந்தான், இந்தோனிசியா, புருணை போன்ற நாடுகளுக்கும் விரிவுபடுத்தி, ஆசியான் நாடுகள் முழுமைக்குமான அனைத்துலக ஒலிபரப்பாக மாறும் சாத்தியத்தை ஆராய்ந்து வருகின்றது.

#TamilSchoolmychoice

சரவாக் மாநிலத்திலுள்ள மிரி நகரத்தில் ஆஸ்ட்ரோ ஒலிபரப்பை தற்போது விரிவுபடுத்தியுள்ளதால், கிழக்கு மலேசியா பகுதிகளிலும் ஆஸ்ட்ரோ தனது தடங்களைப் பதிக்கவுள்ளது. குறிப்பாக சரவாக் மாநிலத்தின் சிபு நகருக்கு ஆஸ்ட்ரோ தனது வானொலி ஒலிபரப்பை விரிவுபடுத்தியுள்ளது.

ஆஸ்ட்ரோ குழுமத்தின் எரா எஃப்.எம், ஹிட்ஸ் எஃப்.எம், மை எஃப்.எம், ஆகிய அலைவரிசைகளை சரவாக் மாநிலத்திற்குள் விரிவுபடுத்தும் நிகழ்வில் பத்திரிக்கையாளர்களிடம் இந்த தகவலை ஆஸ்ட்ரோ நிறுவனத்தின் உள்ளடக்க நிர்வாகி இந்த விவரங்களைத் தெரியப்படுத்தினார்.

சபா மாநிலத்திலும் கோத்தாகினபாலு, சண்டகான் நகரங்களில் ஆஸ்ட்ரோ வானொலி தனது சேவைகளைத் தொடக்கியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து கட்டம் கட்டமாக ஆஸ்ட்ரோ வானொலி ஒலிபரப்பு அனைத்துலக ஒலிபரப்பாக உருமாறும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.