Home அரசியல் எம்.ஐ.இ.டி.-ஏய்ம்ஸ்ட் சொத்துக்கள் தற்போது யார் வசம்? – ம.இ.கா தலைவர்களிடையே முட்டல்! மோதல் அறிக்கைகள்!

எம்.ஐ.இ.டி.-ஏய்ம்ஸ்ட் சொத்துக்கள் தற்போது யார் வசம்? – ம.இ.கா தலைவர்களிடையே முட்டல்! மோதல் அறிக்கைகள்!

580
0
SHARE
Ad

aimst-universityஆகஸ்ட் 19 – தேசியத் தலைவர் தேர்தலுக்கு முன்னோட்டமாக, ம.இ.கா தலைவர்களிடையே ஒரு விவகாரத்தில் கடுமையான கருத்து மோதல்கள் எழுந்துள்ளன. கோடிக்கணக்கான ரிங்கிட் மதிப்புடைய ஏய்ம்ஸ்ட் பல்கலைக் கழகம் மற்றும் அதனை நிர்வகிக்கும் எம்.ஐ.இ.டி. அறவாரியம் ஆகியவற்றின் சொத்துக்கள் உண்மையிலேயே தற்போது யார் வசம் உள்ளன என்பது குறித்த சர்ச்சையில் தற்போது ம.இ.கா தலைவர்கள் சிக்கியுள்ளனர்.

#TamilSchoolmychoice

கடந்த சில நாட்களாக, தமிழ்ப் பத்திரிக்கைகளில் அறிக்கை மோதல்களாக உருவெடுத்துள்ள இந்த சர்ச்சைக்கு மூல காரணம் தேசியத் தலைவருக்கான தேர்தல்தான் என்று கருதப்படுகின்றது.

நடப்பு தேசியத் தலைவர் பழனிவேலுவை எதிர்த்து துணைத் தலைவர் டாக்டர் சுப்ரமணியம் தேசியத் தலைவருக்கான போட்டியில் குதிப்பார் என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்படுவதால், இரு அணிகளும் முன்னேற்பாடாக சில அரசியல் வியூகங்களில் இறங்கியுள்ளனர். முன்னாள் தேசியத் தலைவர் சாமிவேலு, டாக்டர் சுப்ரமணியத்தை ஆதரிக்கின்றார் என்பதால் அவரது நிர்வாகத்தின் கீழ் வரும் எம்.ஐ.இ.டி மற்றும் ஏய்ம்ஸ்ட் பல்கலைக் கழக சொத்துக்கள் குறித்த சர்ச்சைகளும் எழுந்துள்ளன.

இந்த சொத்துக்கள் எல்லாம் ம.இ.கா.வின் நேரடி நிர்வாகத்தின் கீழ் வரவேண்டும் என மத்திய செயலவை உறுப்பினரும், பழனிவேலுவின் தீவிர ஆதரவாளருமான கே.பி.சாமி இன்று பத்திரிக்கைகளில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதே தோரணையில் பல ம.இ.கா தலைவர்களும் இந்த சொத்துக்கள் ம.இ.காவின் நேரடி நிர்வாகத்தின் கீழ் நிர்வகிக்கப்பட வேண்டும் என அறைகூவல் விடுத்துள்ளனர்.

ஆனால் சில நாட்களுக்கு முன்னால், சாமிவேலு விடுத்த அறிக்கையொன்றில் இந்த சொத்துக்கள் தனியார் அறக்கட்டளை மூலம் நிர்வகிக்கப்படுவதாகத் தெரிவித்திருந்தார்.

ம.இ.கா. தேசியத் தலைவருக்கான தேர்தல் முடிவடைந்ததும், இந்த சொத்துக்கள் அனைத்தையும் ம.இ.கா.வின் கைப்பிடிக்குள் கொண்டுவரும் முயற்சிகளை தேசியத் தலைவர் பழனிவேல் மேற்கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

அதற்கு முன்னோட்டமாகத்தான் அவருக்கு ஆதரவான ம.இ.கா தலைவர்கள் ஏய்ம்ஸ்ட் சொத்துக்கள் ம.இ.கா வசமாக வேண்டும் என்ற அறைகூவல்களை இப்போதிருந்தே விடுத்து வருகின்றனர் என்றும் கூறப்படுகின்றது.