எம்ஐஇடி தலைவருமான விக்னேஸ்வரன் டேஃப் கல்லூரியின் வசதிகள், அங்கு இயங்கும் மாணவர்களுக்கான பரிசோதனைக் கூடங்கள் (labs) ஆகியவை குறித்து நேரடியாக பார்வையிட்டுத் தெரிந்து கொள்ள நேற்றைய வருகையை மேற்கொண்டார்.
டேஃப் கல்லூரியின் மூலம் வழங்கப்படும் கல்வித் தகுதிகள், பயிற்சிகள், கல்லூரியில் இருக்கும் வசதிகள் அனைத்தும் இன்றைய நவீன தொழில் துறையின் தேவைகளுக்கு ஏற்ப இருப்பதை எம்ஐஇடி நிருவாகம் தொடர்ந்து கண்காணித்து உறுதி செய்து வருகிறது. அவற்றை மேலும் மேம்படுத்துவது குறித்தும் எம்ஐஇடி தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது.
1972-ஆம் ஆண்டில் நெகிரி இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னோலோஜி (Negeri Institute of Technology) என்ற பெயரில் தொடங்கப்பட்டது இந்தக் கல்லூரி. 1988-ஆம் ஆண்டில் எம்ஐஇடி ( மாஜூ இன்ஸ்டிடியூட் ஆப் எடுகேஷனல் டெவலெப்மெண்ட் – Maju Institute of Educational Development) இந்தக் கல்லூரியை கையகப்படுத்தியது. டேஃப் கல்லூரி என்ற பெயர் மாற்றமும் செய்யப்பட்டது.
விக்னேஸ்வரனின் நேற்றைய வருகை தொடர்பான சில படக் காட்சிகளை இங்கே காணலாம்: