பார் போற்றிய சகாப்தம் நீ..
என் வாழ்நாளில் எனக்குவாய்த்த தெய்வம் நீ..
‘கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை’ – 400
கல்வி ஒன்றே அழிவற்ற செல்வம். அதற்கொப்பான சிறந்த செல்வம் வேறு எதுவும் இல்லை என உணர்ந்த உன்னதத் தலைவர் துன் ச.சாமிவேலு அவர்கள். வீட்டுக்கொரு பட்டதாரி இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்தவர் மட்டுமல்ல, அதை நிறைவேற்ற ஏதுவாக உயர்கல்விக் கூடங்களையும் நிறுவியவர்.
அவரது உருவச் சிலையை இன்று, துன் அவர்களின் எண்ணத்திலும், உழைப்பிலும் உருவான ஏம்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் ம.இ.கா நிறுவியது, வரலாற்றுப்பூர்வமான நிகழ்ச்சி மட்டுமல்ல, வரலாறான ஒரு மாமனிதருக்கு நன்றியுள்ள மனித மனங்களால் கட்டப்பட்ட கற்சிலை.