Home நாடு “தாய் மொழிப்  பள்ளிகளை மதிப்போம்”- பிரதமர்  அறைகூவல்

“தாய் மொழிப்  பள்ளிகளை மதிப்போம்”- பிரதமர்  அறைகூவல்

183
0
SHARE
Ad

ஜோகூர் பாரு: நாட்டில் இயங்கிக் கொண்டிருக்கும் சீன, தமிழ் பள்ளைகளை அனைத்து தரப்புகளும் மதிக்க வேண்டும் – காரணம் இத்தகைய கல்வி நடைமுறை நமது நாட்டில் நீண்ட காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது – என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.

இந்த நடைமுறை மாற்றப்பட வேண்டியது இல்லை எனவும் அவர் வலியுறுத்தினார்.

நேற்று சனிக்கிழமை இரவு (மே 25) நடைபெற்ற தேசிய ஒற்றுமை கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர், நமது கடமை என்னவென்றால் இந்த சீன, தமிழ் பள்ளிகள் இயங்குவதற்கான வசதிகளையும் புரிந்துணர்வையும் மதிப்பையும் வழங்குவதாகும் என தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“இந்த கல்வி நடைமுறை நீண்ட காலமாக நமது நாட்டில் கடைப்பிடிக்கப்பட்டு வந்திருக்கிறது. ஒருபுறம் அனைவரும் பயிலக்கூடிய தேசியப் பள்ளிகள் இயங்கிக் கொண்டிருக்கும் அதே வேளையில் சீன, தமிழ் புள்ளிகளும் நமது நாட்டில் இயங்கி வந்திருக்கின்றன” எனவும் அன்வார் தெரிவித்தார்.

“இத்தகைய  கல்வி முறையில் இருக்கும் வேறுபாடுகள் நமது நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நிலவும் மக்கள் வாழ்வியலை பிரதிபலிப்பதாகவும் அமைந்திருக்கிறது.  சில பகுதிகளில் நூறு விழுக்காடு மலாய்க்காரர்கள்  இருக்கிறார்கள். சில பகுதிகளில் சீன, இந்திய சமூகத்தினர் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். இந்த வேளையில் முஸ்லிம்கள் தங்களின் புனித நூலான அல்குரானில் இனம், மனிதர்களின் நிறம், அவர்கள் பேசும் மொழி, இவற்றுக்கு இடையிலான வேறுபாடுகளை மதிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருப்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். நாம் வெவ்வேறு பிரதேசங்களில் இருந்து வருபவர்கள் என்பதையும் நமக்குள் இன, மொழி ரீதியாகவும், உடலின் நிறத்திலும் வேறுபாடுகள் இருப்பதை நாம் மதிக்க வேண்டும். இந்த வேறுபாடுகளை அனைவரும் புரிந்துகொண்டு ஒருவரை ஒருவர் மதிக்க வேண்டும் என புனித நூலான குர்ஆன் வலியுறுத்துகிறது” எனவும் அவர் தெரிவித்தார்.