Home நாடு ஏய்ம்ஸ்ட் பல்கலைக் கழகத்தின் இணை வேந்தராக சரவணன் நியமனம்

ஏய்ம்ஸ்ட் பல்கலைக் கழகத்தின் இணை வேந்தராக சரவணன் நியமனம்

320
0
SHARE
Ad

சுங்கைப்பட்டாணி : கடந்த 23 ஆண்டுகளாக சிறப்பாக இயங்கி வரும் ஏய்ம்ஸ்ட் பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழா நாளை சனிக்கிழமை (மே 25) அந்தப் பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெறுகிறது.

இந்தப் பட்டமளிப்பு விழாவின் சிறப்பம்சமாக அமையவிருப்பது மஇகா தேசியத் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் இணை வேந்தராக நியமிக்கப்படவிருப்பதுதான். சரவணன் எம்ஐஇடி அறவாரியத்தின் துணைத் தலைவருமாவார்.

நாளை நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் சரவணன் அதிகாரபூர்வமாக இணை வேந்தர் பொறுப்பை ஏற்றுக் கொள்வார்.

#TamilSchoolmychoice

மஇகாவின் எம்ஐஇடி அறவாரியத்தால் நடத்தப்படும் ஏய்ம்ஸ்ட் பல்கலைக் கழகம் இதுவரையில் 3,500-க்கும் மேற்பட்ட மருத்துவம் உள்ளிட்ட பலதுறை பட்டதாரிகளை உருவாக்கியிருக்கிறது. அவர்களில் பெரும்பாலோர் இந்தியர்களாவர்.