Home நாடு சுங்கை பாக்காப் (பினாங்கு) சட்டமன்ற உறுப்பினர் காலமானார் – இன்னொரு இடைத் தேர்தல்!

சுங்கை பாக்காப் (பினாங்கு) சட்டமன்ற உறுப்பினர் காலமானார் – இன்னொரு இடைத் தேர்தல்!

180
0
SHARE
Ad
நோர் சாம்ரி லாத்திப்

ஜோர்ஜ் டவுன் : கோலகுபு பாரு இடைத் தேர்தலின் வெப்பம் தணிவதற்கு முன்பே இன்னொரு சட்டமன்ற இடைத் தேர்தலை நாடு எதிர்நோக்கவுள்ளது. பினாங்கு சுங்கை பாக்காப் சட்டமன்ற உறுப்பினர், 56 வயதான நோர் சாம்ரி லாத்திஃப் இன்று வெள்ளிக்கிழமை (மே 24) காலமானார்.

செபராங் ஜெயா மருத்துவமனையில் பாஸ் கட்சியைச் சேர்ந்த அந்த சட்டமன்ற உறுப்பினர் பிற்பகல் 1.38 மணிக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் காலமானார். வயிற்றுப் பகுதியில் ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக அவர் காலமானார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சுங்கை பாக்காப், பினாங்கு மாநிலத்தின் நிபோங் திபால் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ்வரும் சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.

#TamilSchoolmychoice

கோலகுபு பாரு போன்றே வாக்காளர்களை இனவிழுக்காடு ரீதியாகக் கொண்டிருக்கும் சட்டமன்றம் சுங்கை பாக்காப் ஆகும். கடந்த ஆண்டு புள்ளிவிவரங்களின்படி 59.4 விழுக்காட்டு மலாய் வாக்காளர்களையும், 22.5 விழுக்காட்டு சீன வாக்காளர்களையும்,   17.4 விழுக்காடு இந்திய வாக்காளர்களையும்  0.7 விழுக்காடு மற்ற வாக்காளர்களையும் சுங்கை பாக்காப் கொண்டிருக்கிறது.

நோர் சாம்ரி நிபோங் திபால் தொகுதி பாஸ் கட்சியின் தலைவருமாவார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் அவர் 1,563 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்டவர் பிகேஆர் கட்சியைச் சேர்ந்த நூர்ஹிடாயா சே ரோஸ் ஆவார்.