Home அரசியல் மூசா மாற்றி மாற்றி பேசுகிறார் – வேதமூர்த்தி சாடல்

மூசா மாற்றி மாற்றி பேசுகிறார் – வேதமூர்த்தி சாடல்

488
0
SHARE
Ad

Waytha-featureபினாங்கு,பிப்.7- காவல்துறையின் முன்னாள் தலைவர் டான்சி மூசா ஹசான்  நேரத்திற்கு ஏற்றார் போல் செய்தி வெளியிடுவதாக வேதமூர்த்தி சாடினார்.

2007ஆம் ஆண்டு ஹிண்டாராப் போராட்டத்தில் ஈடுபட்ட போது விடுதலை புலிகளுடன் தொடர்பு இருப்பதாகத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அரசாங்கம் ஹிண்டாராப்புக்கு தடை விதித்தது.  தடையை எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட்டது.

வழக்கு விசாரணையின் போது கூட மூசா ஹசான் விடுதலை புலிகளுடன் ஹிண்டாராப் இயக்கத்திற்கு  தொடர்பு இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.

#TamilSchoolmychoice

ஆனால் தற்போது தொடர்பு இருக்குமா? என்று விசாரிக்க சொன்னதாக கூறியிருக்கிறார்.  மூசா ஹிசான் அன்று கூறியது அனைத்து நாளிதழ்கள், ஊடகங்களில் வெளியாகி இருந்ததை அனைவரும் அறிவர். அதற்கான ஆதாரங்கள் அனைத்தும் தங்களிடம் இருப்பதாக ப்ரீ மலேசியாவிற்கு வழங்கிய நேர்காணலின் போது வேதமூர்த்தி கூறினார்.