ஈப்போ,பிப்.7- டத்தோ ஆர்.கணேசன் தொடுத்துள்ள ஆபாச வீடியோ வழக்கைச் சந்திக்க தயார் என்று சிவகுமார் சவால் விடுத்தார். ஆபாச வீடியோ தயாரிப்பு, விநியோகத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று ஜ.செ.க.வைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
ஆபாச குறுந்தட்டினால் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாக மாநில சட்டமன்ற சபாநாயகர் டத்தோ ஆர்.கணேசன் 2 கோடியே 50 லட்சம் கேட்டு வழக்குத் தொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கடந்தாண்டு டிசம்பர் மாதம் 21ஆம் தேதி ம.இ.கா. அலுவலகத்திற்கு ஒரு கடிதம் வந்ததாகவும், அதில் பேரா மாநில ம.இ.கா. தொடர்புக்குழு என குறிப்பிட்டிருந்த அக்கடிதத்தை பிரித்து பார்த்தபோது அதில் ட்த்தோ கணேசனின் ஆபாசப் புகைப்படங்கள் அடங்கிய குறுந்தட்டும் இணையத்தளச் செய்தி நகலும் இருந்த்தைக் கண்டு தன் நண்பர்களிடம் தெரிவிக்க முயன்றபோது ஆதி.சிவசுப்பிரமணியமும் இதேபோன்ற கடித உறையைப் பெற்றிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்ததாகவும்ம் இது தொடர்பில் காவல்துறையில் புகார் செய்திருப்பதாகவும் சிவகுமார் தெரிவித்தார்.
ஆனால் உயரிய சபாநாயகர் பதவி வகிக்கும் டத்தோ ஆர்.கணேசனின் பெயரை களங்கப்படுத்தும் நோக்கில் தாங்கள் எதுவும் செய்யவில்லை என்றும், அதனால் 2 கோடியே 50 லட்சம் கேட்டு தொடர்ந்துள்ள வழக்கை எதிர்நோக்க தயாராக இருப்பதாகவும், இது குறித்து தங்களின் வழக்கறிஞரோடு கலந்து ஆலோசித்து வருவதாகவும் முன்னாள் சபாநாயகரான சிவகுமார் செய்தியாளர்களிடம் கூறினார்.