மும்பை, ஆகஸ்ட் 23- ஷாருக்கானின் நடிப்பில் வெளிவந்துள்ள சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படம் வசூலில் சாதனை புரியத் துவங்கியுள்ளது.
2013ஆம் ஆண்டில் இதுவரை வெளிவந்த அனைத்துப் படங்களின் வசூலையும் இந்தப் படம் முறியடித்துள்ளது.
இந்தியத் திரைப்பட வரலாற்றிலேயே வசூலில் மூன்றாவது இடத்தைப் பெறுகின்றது என்று வர்த்தக ஆய்வாளரான தரன் ஆதர்ஷ் தன்னுடைய இணையதளச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இதன்மூலம், இந்த வருடத்தின் மிகப்பெரிய வெற்றிப் படமாக இது கருதப்படுகிறது. பெரிய நகரங்களான மும்பை,டெல்லி, பூனே, பெங்களூர் மட்டுமின்றி, திரையிடப்பட்ட சிறிய நகரங்களிலும் இந்தப் படம் ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது.
வெளிடப்பட்ட பிற நாடுகளிலும் குறிப்பாக அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா, லண்டன் ஆகிய இடங்களிலும் இந்த படம் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.