Home நாடு ஸ்ரீமதி சந்தியா மனோஜின் ஒடிஸி நடனம் ஒரு கண்ணோட்டம்!

ஸ்ரீமதி சந்தியா மனோஜின் ஒடிஸி நடனம் ஒரு கண்ணோட்டம்!

1107
0
SHARE
Ad

994910_357388794391472_500910119_n

கோலாலம்பூர், ஆகஸ்ட் 26 – கடந்த வாரம் சனிக்கிழமையன்று கோலாலம்பூர் பிரிக்பீல்ட்ஸ் நுண்கலை ஆலயத்தில் குரு ஸ்ரீமதி சந்தியா மனோஜ் அவர்கள் அரங்கேற்றிய ‘தச மகா வித்யா’ ஒடிஸி நடனம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட தினகரன் நுண்கலை கலாலயம் நிறுவனர் தனேஷ் பாலகிருஷ்ணன் என்பவர் தனது பார்வையில் அந்நிகழ்வு குறித்த கருத்துக்களை செல்லியலுக்காக எழுதியுள்ளார்.

#TamilSchoolmychoice

தனேஷின் கருத்துக்கள் பின்வருமாறு:-

“ஸ்ரீமதி சந்தியா மனோஜ் அவர்கள் அரங்கேற்றிய ‘தச மகா வித்யா’ ஒடிஸி நடனம் இன்னும் என் மனதில் நீங்கமற நிறைந்துள்ளது”

“சக்தி வழிபாடு இன்று உலகம் எங்கும் அதிகமாக உள்ளது. வீட்டிலும் நாட்டிலும் பெண்களின் பங்களிப்பும் ஆதிக்கமும் அதிமாகிக் கொண்டுள்ளது. கோயில்களில் கூட சக்தி வழிபாடு ‘சாக்தம்’ இன்று உயர்ந்த நிலையில் உள்ளது. சாக்த தத்துவத்தையும், பத்து வகையான சக்தி தெய்வங்களைப் பற்றியும், தன்னுடைய ஆடம் திறனால் அரங்கத்தையே மெய் மறக்கச் செய்தவர்”

“இவரின் தனிச் சிறப்பு நிருத்தத்தில் உடலின் எல்லாப்பாகங்களும் அதாவது பாதம் வரை எல்லா உறுப்புகளும் அழகுற இயக்கி தசா மகா வித்யாவைக் கண்ணெதிரே சேர்த்தவரும் ஆவர்”550320_10201570458161057_1056944989_n

“இக்கலை நாட்டியத்தின் ஒரு பெரும் பகுதியாக அமைந்துள்ளது. ஒடிஸி நாட்டியத்தில் நிருத்தம் நன்கு அறிந்து நன்கு அரங்கேற்றினார். ஸ்ரீமதி சந்தியா மனோஜ் தன்னுடைய நிருத்தம் பிரத்தியேக கருத்து ஒன்று வெளிப்படுத்தி தன் கலாரசனை வெளிப்படுத்தி அனைவராலும் சுலபமாக இரசிக்க வைத்து நீங்கமற பதித்து விட்டார். இந்நடனம் காண்பவர் மனதை கவர்வது மட்டுமில்லாமல், ஸ்ரீமதி சந்தியா மனோஜ் மிக மென்மையான நிலைக்கு அழைத்துச் செல்லும் தன்மை வாய்ந்தவர். நடனத்தில் சிருங்கார ரசம் நிறைந்த காட்சிகளில் நிருத்தம் இன்றியமையாத ஒரு அம்சமாகும்”

“தசம் என்றால் பத்து அதாவது திசைகள் எட்டு மேலும் கீழும் இரண்டு ஆக மொத்தம் பத்து. இந்தப் பேரண்டத்தில் நிகழும் ஒவ்வொரு நிகழ்வும் அதந் ஆக்கச் சக்தியும் பத்து விதமான நிலைகளில் இருக்கின்றது என்பதனைத் தன் ஆடல் வழியாக நன்கு தெளிவுபடுத்தினார்”

“இவரின் ஆடல் கலை வழியாக இந்த பிரபஞ்சம் நம் உடல் என்று பொருள் கொண்டால் அந்தப் பத்து விதமான சக்தியும் நம் உடலிலும் இருக்கும் என்பதனை இந்த தச மகா வித்யா வழி கலை ஆர்வாலரிடம் சேர்ப்பித்துள்ளார்”

“எல்லாம் வல்ல அம்பிகையின் அருளால் குரு ஸ்ரீமதி சந்தியா மனோஜின் கலைச் சேவை ஓங்கட்டும்” இவ்வாறு தனேஷ் தெரிவித்துள்ளார்.