Home இந்தியா விஜயகாந்த் பிறந்த நாள்: ராகுல் வாழ்த்து

விஜயகாந்த் பிறந்த நாள்: ராகுல் வாழ்த்து

646
0
SHARE
Ad

ஆக. 26- தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 61-ஆவது பிறந்த நாளையொட்டி காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் திக்விஜய் சிங் உள்ளிட்டோர் அவருக்கு ஞாயிற்றுக்கிழமை வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

திமுக சார்பில் திருச்சி சிவா, வாகை சந்திரசேகர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மக்களவைத் தேர்தலில் தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸýம், திமுகவும் விருப்பம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால் தேமுதிக பிடிகொடுக்காமல் இருந்து வருகிறது.

Vija_0இந்நிலையில் விஜயகாந்தின் 61-வது பிறந்தநாளையொட்டி ராகுல் காந்தி தொலைபேசி வாயிலாக அவருக்கு வாழ்த்துத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முக்கிய கட்சியாக திமுக இருந்தது. அந்தநேரத்தில் தமிழகத்துக்கு பலமுறை ராகுல் வந்து சென்றபோதும்கூட, கருணாநிதியைச் சந்திக்காமலேயே தில்லி திரும்பினார்.

இந் நிலையில் விஜயகாந்துக்கு ராகுல் வாழ்த்து தெரிவித்திருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் தேசிய தலைவர்கள் திக்விஜய் சிங், குலாம் நபி ஆசாத், தமிழக மேலிடப் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் ஆகியோரும் விஜயகாந்துக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன், மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திருநாவுக்கரசர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், நடிகர் விஜய் உள்பட பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தேமுதிகவுடன் பாஜகவும் கூட்டணி தொடர்பாக பேசி வந்தது. ஆனால் பாஜக தரப்பில் யாரும் விஜயகாந்துக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

யாருடன் கூட்டணி? முன்னதாக விஜயகாந்த் தனது பிறந்தநாளையொட்டி ஞாயிற்றுக்கிழமை காலை கோயம்பேட்டில் உள்ள சிவன் கோயிலுக்குச் சென்று குடும்பத்துடன் வழிபட்டார். பின்னர் சாலிகிராமத்தில் உள்ள தனது வீட்டில் தொண்டர்களைச் சந்தித்தார்.

மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக செய்தியாளர்கள் அவரிடம் கேட்டபோது, மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் முடிவு செய்யப்படும் என்று கூறினார்.

தென்சென்னை மாவட்ட தேமுதிக சார்பில் நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் 10 ஜோடிகளுக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டது. தேமுதிகவின் இளைஞரணிச் செயலாளர் எல்.கே.சுதீஷ் திருமணத்தை நடத்திவைத்தார்.