கோலாலம்பூர், ஆகஸ்ட் 26 – டிபிபிஏ என்று அழைக்கப்படும் (Trans-Pacific Partnership Agreement ) ஒப்பந்தத்தில் அரசாங்கம் ரகசியம் காக்கக்கூடாது என்றும், அந்த ஒப்பந்தம் பற்றி விவரங்களை பொதுமக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறியுள்ளார்.
“அரசாங்கம் இந்த விஷயத்தில் ரகசியம் காக்கக் கூடாது காரணம் இதில் சம்பந்தப்பட்டிருப்பவர்கள் அனைவரும் மலேசிய மக்கள்” என்று இன்று டிபிபிஏ சார்பாக நடைபெற்ற மலாய் பொருளாதார நடவடிக்கைக் குழு கூட்டத்தில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் மகாதீர் தெரிவித்துள்ளார்.
“இந்த ஒப்பந்தத்தை மறைமுகமாக வைக்கிறார்கள் என்றால் அதில் மக்களுக்கு தெரியக்கூடாது விஷயங்கள் ஏதோ இருக்கின்றன. இந்த ஒப்பந்தம் நம்முடைய இறக்குமதியை அதிகரிக்கும் ஆனால் ஏற்றுமதியைக் குறைத்துவிடும். இது நமக்கு நல்லதல்ல. எனவே இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டாம் என்று அரசாங்கத்தை மறைமுகமாகக் கேட்டுக்கொள்கிறேன்” என்று மகாதீர் தெரிவித்துள்ளார்.