Home வணிகம்/தொழில் நுட்பம் அட்சய திருதியை முன்னிட்டு நாடு முழுவதும் 212 கிலோ தங்கம் விற்பனை!

அட்சய திருதியை முன்னிட்டு நாடு முழுவதும் 212 கிலோ தங்கம் விற்பனை!

786
0
SHARE
Ad

கிள்ளான், ஆக. 26- இவ்வாண்டில் கொண்டாடப்பட்ட அட்சய திருதியை முன்னிட்டு நாடு முழுவதும் 212 கிலோ தங்கம் விற்பனையாகியுள்ளது என மலேசிய இந்தியர் நகை வணிகர் பொற்கொல்லர் சங்கத்தின் தலைவர் ஹாஜி அப்து ரசூல் தெரிவித்தார்.

15TH_GOLD_1428839fநேற்று கிள்ளானில் நடைபெற்ற நகை வணிகர் பொற்கொல்லர் சங்கத்தின் 18-ஆம் ஆண்டு பொதுக்கூட்டத்தில் அவர் தமது உரையில் இவ்வாறு தெரிவித்தார்.

அட்சய திருதியை

#TamilSchoolmychoice

ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்கு பிறகு வரும் திருதியை திதி சிறப்பு வாய்ந்தது.

சித்திரை மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் திருதியைதான் அட்சய திருதியை எனப்படுகிறது.

அட்சயம் என்றால் வளருதல், அள்ள அள்ளக் குறையாமல் வளர்ந்துகொண்டே இருத்தல். அட்சய பாத்திரம் என்பதுபோல.

ist_2098060bஅன்றைய தினம் செய்கிற எந்த காரியமும் வளர்ந்துகொண்டே இருக்கும், வெற்றிகரமாக நடந்து முடியும் என்பது வேத வாக்கு.

மேலும் இந்த நாள் நல்ல பலன்களையும் வெற்றியையும் தரும் என்று நம்பப்படுகிறது. குறிப்பாக மங்களகரமான நீண்டகால சொத்துக்களான தங்கம், வெள்ளி, அவற்றினால் செய்யப்பட்ட நகைகள், வைரம் மற்றும் இதர விலைமதிப்பற்ற கற்கள் மற்றும் வீடு-மனைகள் போன்றவற்றை வாங்க உகந்த நாளாகவும் கருதப்படுகிறது.

மரபியல் வழிவந்தவர் அட்சய திருதியை நாளில் தொடங்கப்பட்ட எந்தவொரு முயற்சியும் தொடர்ச்சியாக வளர்ந்து நன்மையைக் கொடுக்கும் எனக் கூறுகின்றனர்.

ஆகையால் ஒரு வணிகத்தினைத் துவங்குவது, கட்டடம் கட்ட பூமி பூசையிடுவது போன்ற புதிய முயற்சிகளை அட்சய திருதியை நாளில் செய்ய பலர் விரும்புகின்றனர். எனவேதான், அந்நாளில் பலர்  தங்கம் வாங்கி வீட்டில் வழிபடுகின்றனர்.