Home வணிகம்/தொழில் நுட்பம் மலேசியாவில் தங்கம் தயாரிப்புத் தொழிற்சாலைகள்!

மலேசியாவில் தங்கம் தயாரிப்புத் தொழிற்சாலைகள்!

1503
0
SHARE
Ad

Gold-592598கோலாலம்பூர் – மலேசியா தங்கம் தயாரிப்புத் தொழிற்சாலைகளை அமைக்கத் தயாராகிவிட்டதாக பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்தார்.

இதற்கு முன்பு மலேசியாவில் வர்த்தக நோக்கில், தங்கம் தயாரிப்பு நிறுவனங்கள் இல்லை என்றும், தற்போது அந்நிறுவனங்கள் மலேசியாவில் அமைக்கப்படவிருப்பதாக நஜிப் இன்று திங்கட்கிழமை தெரிவித்தார்.

“இதற்கு முன்பு, மலேசியாவிற்கு இறக்குமதி செய்வதற்கு முன்பாக, வெளிநாட்டில் தான் தங்கத்தை உருக்க வேண்டும், சுத்திகரிக்க வேண்டும், உற்பத்தி செய்ய வேண்டும்.”

#TamilSchoolmychoice

“ஆனால் தற்போது, நமது முதல் வர்த்தக தங்கம் சுத்திகரிப்பு நிறுவனம் மூலம், தங்கத்தை உற்பத்தி செய்யும் நிலைக்கு வளர்ச்சியடைந்திருக்கிறோம். இதன் மூலம் தங்கத்தை நம்மால் உருக்கி மெருகூட்ட முடியும்” என்று இன்று திங்கட்கிழமை டெமி இடாமன் செண்ட்ரியான் பெர்ஹாட் (டிஐஎஸ்பி) என்ற நிறுவனத்தைத் துவங்கி வைத்த நஜிப் தெரிவித்தார்.

சிலாங்கூரைச் சேர்ந்த டிஐஎஸ்பி நிறுவனம், ‘Syiling Emas dan Syiling Perak Khas DYMM Sultan Selangor’ என்ற பெயரில் தங்க நாணயங்கள், தங்கக் கட்டிகள், சில்வர் நாணயங்கள் தயாரிப்பதில் சான்றிதழ் பெற்றது.

இன்று நடைபெற்ற இந்நிறுவன அறிமுக விழாவில், பிரதமர் நஜிப், அவரது துணைவியார் டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மான்சோர், சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா, அவரது துணைவியார் தெங்கு பெர்மாய்சூரி சிலாங்கூர் தெங்கு பெர்மாய்சூரி நோராஷிகின் மற்றும் சிலாங்கூர் ராஜா மூடா தெங்கு அமிர் ஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.