Home இந்தியா இந்திய ரூபாய் மதிப்பில் வீழ்ச்சியால் தங்கத்தின் விலை இன்று திடீர் உயர்வு

இந்திய ரூபாய் மதிப்பில் வீழ்ச்சியால் தங்கத்தின் விலை இன்று திடீர் உயர்வு

894
0
SHARE
Ad

????????சென்னை, ஜூலை 24- அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு திடீரென வீழ்ச்சியடைந்துள்ளதால், தங்கத்தின் விலையில் இன்று  சற்று உயர்ந்துள்ளது.

இம்மாதத் தொடக்கத்திலிருந்தே தொடர்ந்து சரிந்து வந்த தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ 176 உயர்ந்து, ஒரு சவரன் ரூ 19,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கிரீஸ் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் எதிரொலியாகத் தங்கத்தின் மீதான முதலீடு வெகுவாகக் குறைந்து, உலகச் சந்தையில் தங்கத்தின் மதிப்புக் குறைந்தது.அதனால்தான் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டது.

#TamilSchoolmychoice

ஆனால்,தற்போது அமெரிக்கா டாடருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளதால், இன்று தங்கத்தின் விலையில் திடீர் உயர்வு ஏற்பட்டுள்ளது.

ஆனால், இந்த விலையேற்றம் நீடிக்காது என்றும்,தங்கத்தின் விலை மீண்டும் சரியும் என்றும் நகை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.