புது டில்லி: உத்தரப்பிரதேசத்தில் சோன்பத்ரா எனும் மாவட்டத்தில், 12 இலட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கச் சுரங்கத்தை இந்தியப் புவியியல் ஆய்வு மைய அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த தொகை மத்திய அரசு இருப்பில் இருக்கும் நிதியை விட ஐந்து மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பகுதியில் கடந்த 1992 முதல் 1993-ஆம் ஆண்டிலேயே தங்கம் உள்ளதா என்பதைக் கண்டுபிடிக்கும் பணித் தொடங்கப்பட்டதாகவும், சுமார் 27 ஆண்டுகளுக்குப் பின்னர் பலன் கிடைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கத்தைத் தவிர்த்து மற்ற சில விலை உயர்ந்த கனிமங்களும் இந்த பகுதியில் இருப்பதாக புவியியல் ஆய்வு மையம் தரப்பில் தெரிவித்துள்ளது.