Home இயக்கங்கள் மலேசிய இந்தியர் நகை வணிகர் பொற்கொல்லர் சங்கத்தின் தலைவராக ஹாஜி அப்துல் ரசூல் மீண்டும் தேர்வு

மலேசிய இந்தியர் நகை வணிகர் பொற்கொல்லர் சங்கத்தின் தலைவராக ஹாஜி அப்துல் ரசூல் மீண்டும் தேர்வு

892
0
SHARE
Ad

கிள்ளான், ஆக. 26- மலேசிய இந்தியர் நகை வணிகர் பொற்கொல்லர் சங்கத்தின் தலைவராக  நாட்டின் புகழ் பெற்ற அப்து ரசாக் நகைக்கடை உரிமையாளர் ஹாஜி அப்து ரசூல் மீண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நேற்று கிள்ளானில் உள்ள பிரபல தங்கும் விடுதியில் மலேசிய இந்தியர் நகை வணிகர் பொற்கொல்லர் சங்கத்தின் 18-ஆம் ஆண்டு பொதுக்கூட்டம் விமரிசையாக நடைபெற்றது.

பினாங்கில் புகழ்பெற்ற தங்க வணிகர் எஸ்.பி தேவன் தலைமையில் புதிய பொறுப்பாளர்கள் தேர்தல் நடைபெற்றது.

#TamilSchoolmychoice

razakசங்கத்தை சிறந்த முறையில் வழி நடத்திக் கொண்டிருக்கும்  ஹாஜி அப்துல் ரசூல் மீண்டும் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

சங்கத்தின் துணை தலைவராக என்.சுப்பிரமணியம், செயலாளராக யு.டி. கீர்த்தி, துணைச் செயலாளராக இளங்கோவன், பொருளாளராக எஸ். மனோகரன் ஆகியோர் மீண்டும் போட்டியின்றி தேர்வுச் செய்யப்பட்டனர்.

15TH_GOLD_1428839fசங்கத்தின் ஐந்து நிர்வாக குழு உறுப்பினர்களாக டத்தோ ஹாஜி முகமட் இப்ராகிம், கந்தசாமி, அப்துல் காதிர், முருகேசன், புஷ்பநாதன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

தியாகராஜன், சண்முகநாதன் ஆகியோர் கணக்காய்வாளர்களாகவும் கிள்ளானில் புகழ்பெற்ற வர்த்தக பிரமுகர் என்.பி. இராமன், வி.ஜி.பி. பாலகிருஷ்ணன் ஆகியோர் மீண்டும் சங்க ஆலோசகர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.