Home கலை உலகம் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்த ‘ராஜா ராணி’ முன்னோட்ட காட்சிகள்!

10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்த ‘ராஜா ராணி’ முன்னோட்ட காட்சிகள்!

644
0
SHARE
Ad

ஏ.ஆர். முருகதாஸ் தயாரிப்பில் ஆர்யா- நயன்தாரா ஜோடியாக நடிக்கும் படம் ராஜா ராணி. இப்படத்தை பிரபல இயக்குனர் சங்கரிடம் உதவியாளராக இருந்த அட்லீ இயக்கியிருக்கிறார்.

Arya Nayanthara in Raja Rani Movie Photos, Nayanthara Latest Photos in Raja Rani Movieஆர்யா- நயன்தாராவுடன் சத்யராஜ், ஜெய், நஸ்ரின் நசீம், சந்தானம் ஆகியோரும் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்க ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்தபடம் தொடங்கிய நாளில் இருந்தே படத்திற்கு அதிகப்படியான விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

#TamilSchoolmychoice

கடந்த 4 நாட்களுக்கு முன் சென்னையில் இப்படத்தில் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. ‘யூ டியூப்’ இணைய தளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நான்கு நாட்களில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ராஜா ராணி முன்னோட்ட காட்சிகளை  பார்த்து மகிழ்ந்துள்ளனர்.

குறைந்த நாட்களில் ஒரு முன்னோட்ட காட்சிகளை இத்தனை பேர் பார்த்திருப்பது தமிழ் சினிமாவில் இதுவே முதல்முறை என சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

 

ராஜா ராணி திரைப்படத்தின் முன்னோட்டம்

http://www.youtube.com/watch?v=r8uXnun2AlI