Home கலை உலகம் நடிகை ப்ரியாவை திருமணம் செய்து கொள்ள போகிறார் இயக்குநர் அட்லீ!

நடிகை ப்ரியாவை திருமணம் செய்து கொள்ள போகிறார் இயக்குநர் அட்லீ!

1366
0
SHARE
Ad

atlee priya,சென்னை, செப்டம்பர் 8 – ‘ராஜா ராணி’ என்ற ஒரே படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர் இயக்குனர் அட்லீ. இந்த சிறிய வயதிலேயே எப்படி இத்தனை அழகான காதல் படத்தை இயக்கினார் என்று அனைவரும் கேட்டனர்.

atlee priyaஅவர் மனதிலும் நீண்ட நாட்களாக ஒரு காதல் இருந்துள்ளது. இவர் சின்னத்திரை பிரபலமான ப்ரியாவை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அட்லீக்கும், ப்ரியாவிற்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த விழாவில் பல திரைநட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். இவர்களுக்கு வரும் நவம்பர் மாதம் திருமணம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

atlee_priyaப்ரியா, சிங்கம் படத்தில் அனுஷ்காவிற்கு தங்கையாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அட்லீ பிரமாண்ட இயக்குநர் சங்கரின் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.