இந்தப் படத்தில் இளம் நடிகர் கதிர் விஜய்யோடு இணைந்து நடிக்கவுள்ளார். கதிரும் இந்தச் செய்தியை உறுதிப்படுத்தியுள்ளார்.
அண்மையக் காலங்களில் குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட சில சிறிய படங்களில் நடித்து தனக்கெட ஓர் அடையாளத்தை உருவாக்கிக் கொண்ட கதிர், ‘பரியேறும் பெருமாள்’ படத்தில் கதாநாயகனாக நடித்து புகழின் உச்சிக்கே சென்றார்.
இதனைத் தொடர்ந்து தற்போது விஜய்யின் படத்தில் நடிக்கப்போகும் கதிர் இதுகுறித்துத் தான் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தெறி, மெர்சல் என இரண்டு வெற்றிப் படங்களை விஜய் நடிப்பில் வழங்கிய அட்லீ மூன்றாவதாக விஜய்யுடன் இணையும் படம்தான் தளபதி63.