Home கலை உலகம் தளபதி63 படத்திற்காக நுட்பமான இசை ஆய்வுக்குள் இறங்கிய ரஹ்மான்!

தளபதி63 படத்திற்காக நுட்பமான இசை ஆய்வுக்குள் இறங்கிய ரஹ்மான்!

1224
0
SHARE
Ad

சென்னை: அட்லீ இயக்கத்தில் தளபதி63 திரைப்படம் தற்போது சென்னையில் படமாக்கப்பட்டு வருகிறது. மெர்சல் படத்தைத் தொடர்ந்து அட்லீயின் இயக்கத்தில் விஜய் நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் அட்லீயைப் பற்றிப் பேசிய ரஹ்மான், அட்லீ இசை இரசனை மிக்கவர் என்று புகழ்ந்தார். தற்போது, உருவாகி வரும் தளபதி63 திரைப்படம் போன்று தாம் ஹாலிவுட்டில் இசையமைத்துள்ளதாகக் கூறினார்.

#TamilSchoolmychoice

தென்னிந்திய திரைப்படத்தில் இந்த முயற்சி இதுவே முதல் முறையாக இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார். அட்லீ, அவராகவே முன் வந்து தனக்கு வேண்டியதை ஒரு சில படங்களின் மாதிரியைக் காண்பித்துப் பெற்றுக் கொள்வார். இவ்வாறான அணுகுமுறையை ரஹ்மான் பாராட்டியுள்ளார்.

இவ்வாறு இசையுடன் ஒன்றிணைந்து, இரசித்து பணியாற்றும் போது திரையில் அது சிறப்பாக வந்திருப்பதை உணர முடியும். அவ்வாறு, ஒவ்வொன்றையும் இரசித்து செயல்படக்கூடியவர் அட்லீ என ரஹ்மான் தெரிவித்தார்.