கோலாலம்பூர்: சமூக சேவை நிறுவனங்கள் தங்களின் திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளை நடத்துவதற்கு முற்றிலும் அரசாங்க மானியங்களை எதிர்பார்ப்பது ஏற்புடையதல்ல என துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் தெரிவித்தார்.
மேலும், அவ்வாறு உதவிப் பெற்ற அமைப்புகள் மக்களுக்கான சேவையை நல்ல முறையில் நடத்துவதோடு, சொந்த காலில் நின்று, இதர தனியார் அமைப்புகளின் உதவியையும் பெற்று சேவையை தொடரலாம் எனக் கூறினார்.
2018– ஆம் ஆண்டில் மட்டும், மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சு, சுமார் 13,673,866.80 மில்லியன் ரிங்கிட் பணத்தை, ஏறக்குறைய 224 சமூக நல அமைப்புகளுக்கு தந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.