Home நாடு மூன்று குற்றச்சாட்டுகளிலிருந்து நஜிப் தற்காலிகமாக விடுவிப்பு!

மூன்று குற்றச்சாட்டுகளிலிருந்து நஜிப் தற்காலிகமாக விடுவிப்பு!

795
0
SHARE
Ad

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் மீதான மூன்று குற்றச்சாட்டுகள் தற்போதைக்கு விடுவிக்கப்பட்டுள்ளன. கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) அந்த உத்தரவை வெளியிட்டுள்ளது. ஆயினும், இக்குற்றச்சாட்டுகளிலிருந்து நஜிப் இன்னும் விடுதலையாகவில்லை என அரசாங்கத் தலைமை வழக்கறிஞர், டோமி தோமஸ் தெரிவித்தார்.

அரசாங்க தலைமை வழக்கறிஞர் டோமி தோமஸ்சின் விண்ணப்பத்திற்கு ஏற்ப இந்த உத்தரவை நீதிபதிமுகமட்நஸ்லான் முகமட் காசாலி வெளியிட்டார்.

2001-ஆம் ஆண்டுக்கான பயங்கரவாத மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் வருவாய் (அம்லா) தடுப்பு மசோதா சட்டத்தின் கீழ் நஜிப் மீது மூன்று கூடுதல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

#TamilSchoolmychoice

நீதிமன்றத்திற்கு உதவவும், நீதிபதியின் சுமையைத் தவிர்ப்பதற்கும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக டோமி குறிப்பிட்டார். கூடிய விரைவில் மீண்டும் இம்மூன்று குற்றச்சாட்டுகளையும் விசாரிக்க புதிய தேதிகள் அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.