Home இந்தியா இந்தியாவின் முதல் ராணுவ செயற்‌கை கோள்! நாளை விண்ணில் பறக்கும்!

இந்தியாவின் முதல் ராணுவ செயற்‌கை கோள்! நாளை விண்ணில் பறக்கும்!

755
0
SHARE
Ad

Indian-Army-Launched-First-Military-Satelliteபெங்களூரு: இந்தியாவின் கப்பல் படைய‌ை நவீனப்படுத்தும் விதமாக இந்தியப்பெருங்கடல் பகுதி‌களை கண்காணிக்கூடிய வகையில் ராணுவத்திற்கு என உருவாக்கப்பட்டுள்ள செயற்கை கோள் நாளை விண்ணில் ஏவப்பட உள்ளது.

முதற்‌ செயற்கை கோள்:

இந்திய ராணுவத்திற்கு என உருவாக்கப்பட்டுள்ள முதற்செயற்கை கோள் இதுவாகும். ஜிசாட்-7 அல்லது ருக்மணி என பெயரிடப்பட்டுள்ள இந்த செயற்கை கோள் 2 ஆயிரத்து 625 கிலோ எடையுடன் நாளை (வெள்ளிக்கிழமை) பிரெஞ்‌ச் கயானாவிலிருந்து விண்ணில் ஏவப்பட உள்ளது. இதன் மூலம் இந்தியபெருங்கடல் பகுதியில் 2 ஆயிரம் நாட்டிகல் மைல் தூரம் அளவிற்கு கண்காணிப்பை மேற்கொள்ள முடியும். இந்தியப்பெருங்கடல் மட்டுமல்லாது வங்ககடல் மற்றும் அரபிக்கடல் , மலாக்கா நீரீணை பகுதிகளையும் கண்காணிக்க முடியும்.
இந்த செயற்கை கோளில் யு.எச்.எப், எஸ். கேயூமற்றும் சி வகை டிரசன்ஸ் பேண்டுகள் பயன்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் கடற்படை மட்டுமல்லாது விமானப்படை தரைப்படை ஆகியவற்றிற்கும் பயன்மிக்கதாக அமையும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

அச்சுறுத்தலை சமாளிக்க:

அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற ராணுவ வலிமை மிக்க நாடுகளில் தங்கள் ராணுவ நடவடிக்கைகளை கண்காணி்ப்பதற்காக தனியான செயற்கைகோளை பயன்படுத்தி வருகிறது. அதே நேரத்தில் வலிமை மிக்க நாடுகளில் ஒன்றாக மாறி வரும் இந்தியாவி்ல் ராணுவத்திற்கென செயற்கை கோள்‌ இல்லாமல் வெளி நாடுகளின் செயற்கை கோள்‌களை குத்தகை அடிப்படையில் பெற்று தகவல் மற்றும் கண்காணிப்பு பணிக்காக பயன்படுத்தி வந்துள்ளது.

சீனா கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னரே ‌செயற்கை கோளை தாக்கி அழிக்க கூடிய ஆயுதங்களை உருவாக்கி ராணுவத்தி்ல் சேர்த்து வைத்துள்ளது. மேலும்வரும் 2020 ஆண்டில் ராணுவத்திற்கென விண்வெளியில் லேசர் ஆயுதங்கள் மற்றும் நானோ தொழி்ல் நுட்பத்தை பயன்படுத்தும் திட்டங்களை செயல்படுத்த உள்ளது. இந்நிலையி்ல்இந்தியா சார்பில் தற்போது ஏவப்படும் இந்த ஜிசாட் -7 செயற்கை கோள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படு்கிறது.

இந்த செயற்கை கோள் மூலம் இந்திய பெருங்கடல் பகுதி மற்றும் சீன படையினரின் ராணுவ நடவடிக்கை மற்றும் எல்லைக் கட்டுப்பாடு ‌கோடு, மற்றும் பதுங்கு குழிகள் போன்றவற்றை எளிதாக கண்காணிக்க முடியும்.