Home இந்தியா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பெயர் அடுத்த மாதம் அறிவிப்பு: அத்வானி, சுஷ்மா சுவராஜ் எதிர்ப்பு

பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பெயர் அடுத்த மாதம் அறிவிப்பு: அத்வானி, சுஷ்மா சுவராஜ் எதிர்ப்பு

764
0
SHARE
Ad

புதுடெல்லி, ஆக. 30– பாராளுமன்றத்துக்கு விரைவில் நடைபெற உள்ள தேர்தலை சந்திக்க காங்கிரஸ், பா.ஜ.க. கட்சிகள் தயாராகி வருகின்றன.

பாரதீய ஜனதா கட்சியில் தேர்தல் பணிக்குழு தேசிய செயலாளராக குஜராத் முதல்–மந்திரி நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

modi721நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒரு சாரார் வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால் பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி, பாராளுமன்ற பா.ஜ.க. தலைவர் சுஷ்மா சுவராஜ் உள்பட சிலர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிப்பதால், மோடி பெயர் அறிவிக்கப்படுவது தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது.

#TamilSchoolmychoice

டெல்லி, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநில தேர்தல் முடிந்த பிறகு மோடி பெயரை அறிவிக்கலாம் என்று அத்வானி ஆதரவாளர்கள் கூறி வருகிறார்கள். இந்த 5 மாநில தேர்தல் தேதி அடுத்த மாதம் வெளியாகும் என்று தெரிகிறது.

இதற்கிடையே 5 மாநில தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே மோடி பெயரை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று பாரதீய ஜனதா தலைவர்களில் ஒரு சாரார் வற்புறுத்தி வருகிறார்கள். அடுத்த மாதம் (செப்டம்பர்) முதல் நரேந்திர மோடி நாடெங்கும் மின்னல் வேக பிரசாரத்தை தொடங்க உள்ளதால், அதற்கு முன்பு நரேந்திர மோடி பெயரை அறிவித்தால், அது பிரசாரத்தில் உத்வேகத்தை ஏற்படுத்தும் என்று கருதுகிறார்கள்.

பாராளுமன்ற மழைக் கால கூட்டத் தொடர் வரும் 6–ந்தேதி முடிய உள்ளது. எனவே அதன் பிறகு மோடி பெயர் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் அத்வானியும் அவரது ஆதரவாளர்களும் 5 மாநில தேர்தலுக்கு பிறகு பிரதமர் வேட்பாளர் பற்றி பேசலாம் என்று கூறி எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். என்றாலும் நரேந்திர மோடி பெயரை அறிவிக்க அவரது ஆதரவாளர்கள் தீவிரமாக முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

நரேந்திர மோடி அடுத்த மாதம் 10–ந்தேதி ஜெய்ப்பூரில் நடக்கும் கூட்டத்தில் பேசுகிறார். 15–ந்தேதி ரேவாரியிலும் 26–ந்தேதி திருச்சியிலும் மோடி பேசுகிறார். அக்டோபர் மாதம் நரேந்திர மோடி பிரசாரம் மேலும் சூடு பிடிக்க உள்ளது.