இந்தியா, பிப்.8 போலி கிரெடிட் கார்டுகளை தயாரித்து போலி கையெழுத்து போட்டு கிரெடிட் கார்டுகள் மூலம் இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் ரூ.30 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் தனியார் மற்றும் அரசு வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு கிரெடிட் கார்டுகள் வழங்கி வருகிறது. கிரெடிட் கார்டுகள் வழங்குவதில் இரு தனியார் வங்கிகள் உள்பட 5 வங்கிகள் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த நிலையில் கிரெடிட் கார்டுகள் மூலம் சட்டவிரோத கும்பல் மோசடியில் ஈடுபட்டு வருகிறது. அசல் கார்டு போலவே தயாரிக்கப்பட்ட போலி கார்டுகளை பயன்படுத்தியும், போலியாக கையெழுத்து போட்டும் வணிக நிறுவனங்கள், நகைக் கடைகளில் பொருட்களை மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் வாங்கி சென்று விடுகிறார்கள்.
வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களின் பணம் வங்கியில் இருந்து வணிக நிறுவனங்களுக்கு சென்று விடுகிறது. ஆனால் பொருள் வாங்காமல் உண்மையான வாடிக்கையாளர் தனது வங்கி கணக்கில் இருந்த பணத்தை இழந்து விடுகிறார். அல்லது அவர் பெயரில் கடன்சுமை ஏறி இவ்வளவு பணம் கட்ட வேண்டும் என்ற தகவல் வருகிறது.
சில ஆண்டுகளாகவே இந்த மோசடி நடந்து வந்தாலும் கடந்த 2 மாதங்களில் மட்டும் இந்தியா முழுவதும் ரூ.30 கோடி அளவுக்கு கிரெடிட் கார்டுகள் மூலம் மோசடி நடந்துள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் அப்பாவி வாடிக்கையாளர்களும் வங்கிகளும்தான்.
வங்கிகளுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் தொடர்பில்லாமல் இடையில் நடைபெறும் மோசடியால் இந்தியாவில் கிரெடிட் கார்டு தொழில் பாதிக்கப்படடுள்ளது. இந்த மோசடியால் கிரெடிட் கார்ட் வழங்கும் வங்கிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.