கோலாலம்பூர், பிப்.8- மலேசிய உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிதியுதவியால் எஸ்டிபிஎம் தமிழ்மொழிப் பாடத்தின் இரண்டாம் தவணைக்கான நூல் தயராக உள்ளது.
இந்நூலினை எஸ்டிபிஎம் இல் தமிழ்மொழிப் பாடம் எடுக்கும் மாணவர்களுக்கும் அதனை போதிக்கும் ஆசிரியர்களுக்கும் விநியோகம் செய்வதோடு தமிழ்மொழிப் பாடம் குறித்த கருத்தரங்கு ஒன்றும் பிப்ரவரி 23ஆம் தேதி, சனிக்கிழமை காலை 8.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை மலாயாப் பல்கலைக்கழகத்தில் கலைபுலத்தின் விரிவுரை மண்டபம் பி.இல் நடைப்பெறவுள்ளது.
கருத்தரங்கின் போது தமிழ்மொழிப் பாடநூல் வெ.10க்கு விற்கப்படும்.
எனவே, எஸ்டிபிஎம் மாணவர்களும் ஆசிரியர்களும் தவறாமல் கலந்து பயன் பெற வேண்டும்.
கருத்தரங்க பதிவுக் கட்டணம் வெ.10 ஆகும். இதில் காலைச் சிற்றுண்டி, மதிய உணவு, பாடக்குறிப்புகள் வழங்கப்படும்.
பிப்ரவரி 20ஆம் தேதிக்குள் வருகையை உறுதி செய்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
கருத்தரங்கம் குறித்து மேல்விவிரங்களுக்கு, முனைவர் கிருஷ்ணன் மணியம் (016-3164891), முனைவர் மோகனதாஸ் (012-2806345), மற்றும் முனைவர் குமரன் (012-3123753) தொடர்பு கொள்ளவும்.