Home நாடு சுதந்திர தினக் கவிதைகள்!

சுதந்திர தினக் கவிதைகள்!

28369
0
SHARE
Ad

 

கோலாலம்பூர், ஆகஸ்ட் 31 –

சுதந்திரக் காற்று! – உதயகுமாரி கிருஷ்ணன்

#TamilSchoolmychoice

ரப்பர் பாலில் நம் ரத்தம் கலந்தோம்…

மரவள்ளி உண்டும் மாண்போடு வாழ்ந்தோம் …

சுடும் வெயிலிலும் பசுமை வளர்த்தோம்…

கடும் அடிமைத்தனம் உடைத்து சுதந்திரம் பெற்றோம்…

 

தேசம் எங்கிலும் நேசம் கண்டோம்…

பல்லின மக்களோடும் பாசம் கொண்டோம்…

பாரினில் புகழைத் தேடித் தந்தோம்…

ஓரினமாய் இங்கு கூடி வாழ்கிறோம்…

 

அதனால் தான்…

அன்று…மரண ரயில் பாதையில் மடிந்த உயிர்களும்

இன்று…புன்னகை முகத்தோடு

பூமியிறங்கி வந்து சுவாசித்து செல்கின்றன

நமது 56 வது சுதந்திரக் காற்றை…

மலேசியர்கள் அனைவருக்கும்

இனிய சுதந்திர தின வாழ்த்துகள்…

 

நான் ஒரு மலேசியன் – ஓவியா ஓமாபதி

 

ஒரு கூட்டில் நாங்கள்

ஒரே கூட்டம் நாங்கள்

மலேசியா நாட்டில் நாங்கள்

மலேசியன் என்பதே நாங்கள்…

 

உணவை நாங்கள்

பகிர்ந்து உண்டோம்

உறவாய் நாங்கள்

பழகி வந்தோம்…

பல மொழிகள் நாங்கள்

ஓதினோம் ஒன்றாய்..

 

பல மொழியில் நாங்கள்

பேசினோம் நன்றாய்…

மதங்களில் நாங்கள்

வேறு என்றாலும்

மனங்களில் நாங்கள்

இறுகிக் கிடப்போம்…

 

தோல்களின் நிறங்கள்

வேறு என்றாலும்

தோழனாய் நாங்கள்

நெருங்கி இருப்போம்…

விடியல் பிறந்த நாளை

மகிழ்வாய் இன்று நாமும்

கொண்டாடி இன்பம் பெற்று

சிறப்பாய் வாழ்வோம் நாளும் …

 

கைகளில் தவளும் இனிய சுதந்திரம் – தனேஷ் பாலகிருஷ்ணன்

 

அன்று அமாவாசையாய்

இருள் சூழ்ந்து கிடந்த

அடிமைத்தனம் விலகி

பௌர்ணமி பிறந்தது

இன்றைய நாளிலே!

 

மொழி வேறாயினும்,

இனம் வேறாயினும்

ஒன்றாய் கூடி வாழ்வதும்

இத்திருநாட்டிலே!

 

ஒற்றுமை கொடியை நாட்டி

உலகமே வியக்க அன்பை ஊட்டி

ஒரே மலேசியராய் வாழ்ந்து காட்டி

ஏட்டினில் எழுதுவோம் என்றும்…

இனிய சுதந்திர தின வாழ்த்துகள்…