Home கலை உலகம் நயன்தாராவுடன் இணைத்து வதந்தி: ஆர்யா ஆவேசம்

நயன்தாராவுடன் இணைத்து வதந்தி: ஆர்யா ஆவேசம்

581
0
SHARE
Ad

செப். 10- நயன்தாராவையும், ஆர்யாவையும் இணைத்து தொடர்ந்து கிசுகிசுக்கள் பரவுகின்றன.

ஏற்கனவே ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தில் ஜோடியாக நடித்தார்கள். தற்போது ‘ராஜாராணி’ படத்திலும் சேர்ந்து நடிக்கின்றனர்.

AryaNayantharaஇருவரும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்து இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

#TamilSchoolmychoice

நயன்தாராவும், ஆர்யாவும் திருமண கோலத்தில் இருப்பது போன்ற படங்களை சமீபத்தில் வெளியிட்டனர்.

பிறகு அது ‘ராஜா ராணி’ பட விளம்பரத்துக்காக வெளியிடப்பட்டது என கூறினர். இப்படியெல்லாமா விளம்பரம் செய்வார்கள் என நயன்தாரா ஆர்யா மீது சிலர் எரிச்சலும் பட்டார்கள்.

நயன்தாராவுடன் இணைத்து வரும் செய்திகளுக்கு ஆர்யா விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:–

‘ராஜா ராணி’ படத்தில் நயன்தாராவும் நானும் கணவன்–மனைவியாக நடிக்கிறோம். படத்தில் எங்களின் திருமண காட்சியொன்று உள்ளது.

Arya Nayanthara in Raja Rani Movie Photos, Nayanthara Latest Photos in Raja Rani Movieஅதை படத்தின் விளம்பரத்துக்காக பயன்படுத்தினர். இது நல்ல யோசனையாகவே எனக்கு பட்டது. எங்களை இணைத்து வதந்திகள் பரப்பப்பட்டு உள்ளது. என்னைப் பற்றி இதுபோன்ற செய்திகள் வெளியாகும் போது நான் சினிமாவில் இன்னும் இருக்கிறேன் என்ற உணர்வுதான் ஏற்படுகிறது.

பிரபலமாக இல்லாதவர்களை கண்டு கொள்ளமாட்டார்கள். நான் எதையும் மறைக்க மாட்டேன். காதல் ஏற்பட்டால் உடனே ரசிகர்களுக்கு தெரிவித்து விடுவேன். சினிமாவில் எனக்கு நிறைய ராணிகள் இருக்கிறார்கள். நிஜ வாழ்க்கையில் ராணியாக போகும் பெண்ணை இதுவரை நான் கண்டுபிடிக்கவில்லை.

பெற்றோர் நிச்சயித்து நடக்கும் நிறைய திருமணங்கள் ‘ஈகோ’, தகராறு காரணங்களால் நன்றாக இல்லை. அந்த ‘கரு’ ராஜா ராணி படத்தில் வைக்கப்பட்டு உள்ளது. கதை மிகவும் பிடித்தது. வசனங்களும் சிறப்பாக உள்ளன. இதில் துறுதுறு இளைஞனாகவும், கணவனாகவும் இரு கெட்டப்பில் வருகிறேன். இவ்வாறு ஆர்யா கூறினார்.