நியூயார்க், செப். 17–அமெரிக்காவின் கிரேண்ட் தீவை சேர்ந்தவர் சலுஸ்டியானோ சான் செஷ்–பயாஸ் குயஷ். வயது 112. உலகின் அதிக வயதான ஆண் என்ற பெருமை பெற்றிருந்தார். இது கின்னஸ் உலக சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றிருந்தது.
இவர் சிறந்த இசையமைப்பாளராகவும், சுரங்க தொழிலாளி ஆகவும் இருந்தார். இவர் கடந்த 1901–ம் ஆண்டில் ஜூன் 8–ந்தேதி ஸ்பெயினில் எல் தெஜாதோ டி பெஜார் என்ற கிராமத்தில் பிறந்தவர். 17–வது வயதில் கியூபாவுக்கு சென்றார்.
அங்கிருந்து வெளியேறி கடந்த 1920–ம் ஆண்டில் அமெரிக்காவில் குடியேறினார். அங்கு கென்டக்குபில் உள்ள லிஞ்ச் நிலக்கரி சுரங்கத்தில் தொழிலாளி ஆக சேர்ந்தார். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் மூலமாக 7 பேரக் குழந்தைகள், 25 கொள்ளு பேர குழந்தைகளும் உள்ளனர்.