Home நாடு ‘மை வாட்ச்’ ல் இருந்து விலகத் தயாராக இருக்கிறேன் – சஞ்சீவன் வருத்தம்

‘மை வாட்ச்’ ல் இருந்து விலகத் தயாராக இருக்கிறேன் – சஞ்சீவன் வருத்தம்

869
0
SHARE
Ad

mainpa1909p22cகோலாலம்பூர், செப் 19 – குற்றத்தடுப்பு அமைப்பான  ‘மை வாட்ச்’ ல் இருந்து தான் விலகிக் கொள்ளத் தயாராக உள்ளதாக மரணத்தை தொட்டு மீண்டு வந்துள்ள ஆர்.ஸ்ரீ சஞ்சீவன்  ‘ஸ்டார்’ நாளிதழுக்கு அளித்த நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார்.

“மை வாட்சிற்கு இயற்கையான முறையில் மரணம் நிகழ வேண்டும் என்று நினைக்கிறேன்.ஒரு தேசபக்தி மிகுந்த மலேசியக் குடிமகனாக நான் எனது கடமையை செய்தேன். ஆனால் அதற்காக நான் சுடப்பட்டேன்.அதுமட்டுமல்லாமல் எனது அமைப்பிற்கு தகவல் கொடுக்கும் நண்பர்களையும் காவல்துறை கைது செய்தது.நான் சுடப்பட்ட அன்று என்னோடு வந்த அந்த நண்பனையும் காவல்துறை போதைப் பொருள் வழக்கில் கைது செய்து எனக்கு எதிராக தவறான தகவல் தருமாறு கட்டாயப்படுத்தியது. இது நியாயம் இல்லை” என்று சஞ்சீவன் வருத்தத்தோடு தெரிவித்துள்ளார்.

இந்த குற்றத்தடுப்பு வேலை தன்னையும், தனது குடும்பத்தையும் ஆபத்திலிருந்து காப்பாற்றப்போவதில்லை என்றும் சஞ்சீவன் மனம் உடைந்து கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

“என்னால் தற்போது எல்லாவற்றையும் நினைவு கூற முடிகிறது. நான் சுடப்பட்ட போது நடந்த விஷயங்கள் யாவும் இப்போது நினைவில் இருக்கிறது” என்று சஞ்சீவன் குறிப்பிட்டுள்ளார்.

தன்னை சுட்டது ஒரு இந்தியன் என்றும், அவர் உயரமாகவும், பருமனாகவும் இருந்ததாகவும் சஞ்சீவன் தெரிவித்துள்ளார்.

மேலும், சஞ்சீவன் 15 கிலோ அளவு உடல் எடை இளைத்துவிட்டதாகவும், தலை முடி வழிக்கப்பட்டு, அவர் மார்புப் பகுதியில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சை தழும்புகளை மறைக்க தடுப்பு கருவிகள் அணிந்திருந்ததாகவும் அந்த நேர்காணல் அறிக்கை கூறுகிறது.

கடந்த ஜூலை மாதம் 27 ஆம் தேதி, நெகிரி செம்பிலானில் உள்ள பாகாவ் சாலை சந்திப்பில், மோட்டாரில் வந்த இருவர் சஞ்சீவனை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அதில் அவரது விலாவில் தோட்டாக்கள் பாய்ந்தது. இருப்பினும் சஞ்சீவன் தீவிர மருத்துவ சிகிச்சையால் உயிர் பிழைத்துள்ளார்.