Home நாடு குற்றத்தடுப்பு சட்டத்தில் திருத்தம்! நாடாளுமன்றத்தில் இன்று வாசிப்பு!

குற்றத்தடுப்பு சட்டத்தில் திருத்தம்! நாடாளுமன்றத்தில் இன்று வாசிப்பு!

538
0
SHARE
Ad

Prisoner-at-bars-006கோலாலம்பூர், செப் 25 – குற்றத்தடுப்பு சட்ட திருத்திற்கான மனு இன்று நாடாளுமன்றத்தில் வாசிப்புக்கு வருகிறது.

அதன் படி, நாடாளுமன்றத்தில் அம்மனு ஏற்றுக்கொள்ளப்பட்டால், சந்தேகப்படும் குற்றவாளிகளை இரண்டு ஆண்டுகள் விசாரணை இன்றி தடுத்து வைக்கும் அதிகாரத்தை அரசாங்கம் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படும்.

ஏற்கனவே விசாரணையின்றி தடுப்புக்காவலில் வைக்கும் அதிகாரங்கள் கொண்ட சட்டங்களான அவசரகால சட்டம் (Emergency Ordinance) மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பு சட்டம் (Internal Security Act) ஆகியவற்றுக்கு எழுந்த கடுமையான விமர்சனங்கள் காரணமாக அவை நீக்கப்பட்டன.

#TamilSchoolmychoice

இதனால் உள்துறை அமைச்சர் அகமட் சாஹிட் ஹமீடி உட்பட பலர் குற்றங்களுக்கு எதிராப் போராடுவதற்குத் தேவையான அதிகாரங்கள் காவல்துறைக்கு இல்லை என்று விமர்சனம் செய்தனர்.

எனினும், பக்காத்தான் மற்றும் சில சமூக அமைப்புகள் விசாரணையின்றி தடுப்புக்காவலில் வைக்கும் சட்டங்களுக்கு எதிராக கடுமையாகப் போராடி வருகின்றனர்.