Home நாடு குற்றத்தடுப்பு சட்டதிருத்தம் ‘உள்நாட்டு பாதுகாப்பு’ சட்டத்தை திரும்பக் கொண்டு வராது – சாஹிட்

குற்றத்தடுப்பு சட்டதிருத்தம் ‘உள்நாட்டு பாதுகாப்பு’ சட்டத்தை திரும்பக் கொண்டு வராது – சாஹிட்

476
0
SHARE
Ad

Zahid-Hamidi1கோலாலம்பூர், செப் 25 – குற்றத்தடுப்பு சட்டம் 1959 ல் செய்யப்படும் திருத்தம், உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தை திரும்பக் கொண்டு வருவதாக ஆகாது என்று உள்துறை அமைச்சர் சாஹிட் ஹமீடி தெரிவித்துள்ளார்.

ஆனால் அந்த சட்ட திருத்தத்தில் விசாரணை இன்றி தடுப்புக்காவலில் வைப்பது குறித்த கோரிக்கை பற்றி விவரிக்க சாஹிட் மறுத்துவிட்டார்.

“இது உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தை திரும்ப கொண்டு வருவது போன்ற திருத்தம் இல்லை. இது மிகக் கடுமையான சட்டமும் இல்லை” என்று இன்று நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் சாஹிட் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

மேலும், இந்த சட்ட திருத்தம் குறித்த முடிவிற்கு வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை காத்திருக்குமாறும் சாஹிட் தெரிவித்தார்.

இந்த சட்ட திருத்தம் குறித்த விவாதத்திற்கு வரும் செப்டம்பர் 28 ஆம் தேதி வழக்கறிஞர் மன்றத்தை புத்ரஜெயாவிற்கு அழைக்கப்போவதாகவும் சாஹிட் குறிப்பிட்டார்.