Home கலை உலகம் வெளியீட்டுக்கு தயாரான ‘வணக்கம் சென்னை’: அக்டோபர் 11-ல் வெளியிட முடிவு

வெளியீட்டுக்கு தயாரான ‘வணக்கம் சென்னை’: அக்டோபர் 11-ல் வெளியிட முடிவு

990
0
SHARE
Ad

செப். 27- தயாரிப்பாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் நகைச்சுவை சரவெடியாக உருவாகியிருக்கும் படம் ‘வணக்கம் சென்னை’.

dd8a87be-7cfa-4588-9817-ddea3b589348OtherImageஇப்படத்தில் மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த், சந்தானம் மற்றும் பலர் நடித்துள்ளார். ‘கொலவெறி’ புகழ் அனிருத் இசையமைத்துள்ளார். ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி தயாரித்திருக்கிறார்.

சமீபத்தில் இப்படத்தின் பாடல்களும், முன்னோட்டமும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

#TamilSchoolmychoice

Vanakkam-Chennai-Stills-3இந்நிலையில், இப்படத்திற்கு தணிக்கை குழு ‘யு’ சான்றிதழ் கொடுத்துள்ளது. இது படக்குழுவினரிடையே மிகுந்த சந்தோஷத்தை அளித்துள்ளது.

எனவே, படத்தை விரைவில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். அதன்படி, இப்படத்தை வருகிற அக்.11-ந் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

 

‘வணக்கம் சென்னை’ முன்னோட்டம்!