Home இந்தியா பா.ஜ.க. தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் இன்று சென்னை வருகை

பா.ஜ.க. தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் இன்று சென்னை வருகை

572
0
SHARE
Ad

சென்னை, செப். 27- பா.ஜ.க.வின் இளந்தாமரை மாநாடு திருச்சியில் நடைபெற்றது.

பாராளுமன்ற தேர்தலை மையமாக வைத்து நடைபெற்ற இந்த மாநாட்டில், பா.ஜ.க. பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்–மந்திரியுமான நரேந்திரமோடி கலந்து கொண்டு பேசினார்.

rajnath-singh_350_060313030256கட்சியின் தேசிய தலைவர் ராஜ்நாத்சிங்கும் மாநாட்டில் பேசினார். பா.ஜ.க. முக்கிய தலைவர்கள் இதில் கலந்துகொண்டனர்.

#TamilSchoolmychoice

பா.ஜ.க. தேசிய தலைவர் ராஜ்நாத்சிங் இன்று (வெள்ளிக்கிழமை) சென்னை வருகிறார்.

தியாகராயநகரில் உள்ள பா.ஜ.க. மாநில தலைமையகமான கமலாலயத்திற்கு மாலை 3 மணிக்கு வருகிறார்.

கட்சி நிர்வாகிகள் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க உள்ளனர். அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களுக்கு அவர் பேட்டியளிக்க உள்ளார். கட்சி நிர்வாகிகளையும் அவர் சந்திக்கிறார்.

பா.ஜ.க. தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் சென்னைக்கு இன்று வருவதையொட்டி, கமலாலயம் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.