புதுடில்லி : நரேந்திர மோடியின் முந்தைய அமைச்சரவையில் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த ராஜ்நாத் சிங் மீண்டும் அதே துறைக்கான அமைச்சராக அறிவிக்கப்பட்டார்.
மோடி தலைமையிலான இந்திய அமைச்சரவை நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 9) பதவியேற்றுக் கொண்டது. இந்திய பாரம்பரிய வழக்கப்படி அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்ட பின்னர் பிரதமர் அவர்களுக்கான துறைகளை அறிவிப்பார்.
மோடிக்கு அடுத்து இரண்டாவதாக ராஜ்நாத் சிங் பதவியேற்றுக் கொண்டதிலிருந்து பாஜக அரசாங்கத்தில் அவருக்கு வழங்கப்பட்டிருக்கும் இரண்டாவது நிலை கௌரவம் நேற்றைய அமைச்சரவை பதவியேற்பு நிகழ்ச்சியில் வெளிப்பட்டது.
இன்று திங்கட்கிழமை (ஜூன் 10) மாலை அமைச்சர்களுக்கான பொறுப்புகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி ராஜ்நாத் சிங் பாதுகாப்புத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் லக்னோ நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட ராஜ்நாத் சிங் 135,159 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.