Home இந்தியா ஜெய்சங்கர் மீண்டும் வெளியுறவு அமைச்சரானார்!

ஜெய்சங்கர் மீண்டும் வெளியுறவு அமைச்சரானார்!

483
0
SHARE
Ad
ஜெய்சங்கர்

புதுடில்லி : நேற்று ஞாயிற்றுக்கிழமை ஜூன் 9-ஆம் தேதி 3-வது தவணைக்குப் பிரதமராகப் பதவியேற்ற நரேந்திர மோடியின் அமைச்சரவையில் தமிழரான ஜெய்சங்கர் சுப்பிரமணியம்  மீண்டும் அமைச்சராக பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டார். அவர் தொடர்ந்து வெளியுறவு அமைச்சராகப் பணியாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

அந்த எதிர்பார்ப்பைப் போலவே அவரை மீண்டும் வெளியுறவு அமைச்சராக மோடி அறிவித்திருக்கிறார்.

ஜெய்சங்கர் பொதுத் தேர்தலில் போட்டியிடவில்லை. மாநிலங்களவை (ராஜ்ய சபா) உறுப்பினராக குஜராத் மாநிலத்தில் இருந்து பதவி வகிக்கிறார். வெளியுறவுத் துறை அமைச்சில் தலைமைச் செயலாளராகவும் பல நாடுகளில் தூதராகவும் பணியாற்றி அனுபவம் பெற்றவர் ஜெய்சங்கர்.