Home இந்தியா பிரமோஸ் ஏவுகணை – இந்தியா வெற்றிகரமாகப் பாய்ச்சியது

பிரமோஸ் ஏவுகணை – இந்தியா வெற்றிகரமாகப் பாய்ச்சியது

884
0
SHARE
Ad

புதுடில்லி : இந்தியத் தற்காப்பு ஆய்வு மற்றும் மேம்பாட்டு அமைப்பு பிரமோஸ் புதிய ஏவுகணையை வெற்றிகரமாக கடலில் பாய்ச்சி பரிசோதனை நடத்தியிருக்கின்றது.

கடலில் இருந்து இன்னொரு கடல் பகுதிக்கு பாயும் ஆற்றல் கொண்டது இந்த பிரமோஸ். விசாகப்பட்டினத்தில் நங்கூரமிட்டிருந்த போர்க்கப்பலில் இருந்து இந்த ஏவுகணை பாய்ச்சப்பட்டது.

நிர்ணயிக்கப்பட்ட இலக்கை முழு சக்தியுடனும், அதிக பட்ச தூரத்திற்குச் சென்று வெற்றிகரமாக பிரமோஸ் தாக்கியது.

#TamilSchoolmychoice

இந்த சாதனையை இந்தியத் தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தன் டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு பாராட்டும் தெரிவித்தார்.