Home கலை உலகம் லதா மங்கேஷ்கர்: இசைக்குயில் – நிமோனியா, கொரொனா பாதிப்பால் மருத்துவமனையில்….

லதா மங்கேஷ்கர்: இசைக்குயில் – நிமோனியா, கொரொனா பாதிப்பால் மருத்துவமனையில்….

672
0
SHARE
Ad

மும்பை : இந்தியாவின் இசைக் குயில் என வர்ணிக்கப்படும் பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் மும்பை பிரீச் காண்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்.

அவரின் உடல் நிலை சீராக இருந்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 92 வயதான அவருக்கு கொரொனா தொற்று பாதிப்புடன் நிமோனியா தொற்றும் கண்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

அவர் உடல் நலமடைய அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள் என பலரும் சமூக ஊடகங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

#TamilSchoolmychoice